பிளவுறுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 3:
[[அணுக்கருப் பொறியியல்|அணுக்கருப் பொறியியலில்]], ஓர் '''பிளவுறு''' (''Fissile'') பொருளானது [[அணுக்கரு பிளவு|அணுக்கரு பிளவிற்கான]] தொடர்வினையை பேணத்தக்கதாகும் . வரையறையின்படி, பிளவுறு பொருட்கள் அணுப்பிளவு தொடர்வினையை [[நொதுமி]]களின் எந்தவொரு வெப்பநிலையிலும் பேண இயலும். பெரும்பான்மை நொதுமி ஆற்றல் விரைவற்ற நொதுமிகளாலோ (எ.கா. ஓர் வெப்ப அமைப்பு) அல்லது 1 MeV (100 TJ/kg)க்கும் கூடுதலான ஆற்றலுடைய விரைவு நொதுமிகளாலோ இருக்கலாம். பிளவுறு பொருட்களை [[நியூத்திரன் மட்டுப்படுத்தி]]யுடன் [[வெப்ப நியூத்திரன் அணு உலை]]களிலும்; [[வேக-நியூத்திரன் அணு உலை]]களில் மட்டுப்படுத்தியின்றியும்; அணுக்கரு ஆயுதங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.
==பிளவுறு அணுக்கருனிகள்==
<!-- {{Actinidesvsfissionproducts}} -->
பொதுவாக, அணு எண் 89இலிருந்து 103 வரை [[அக்டினியம்]] துவங்கி [[லாரென்சியம்]] வரையுள்ள அக்டினைடுகளின் ஒற்றைப்படை எண்ணில் நியூத்திரன்களைக் கொண்ட [[ஓரிடத்தான்]]கள் பிளவுறுமை கொண்டவைகளாக உள்ளன. பெரும்பாலான அணு எரிபொருள்கள் ஒற்றைப்படை [[திணிவெண்]]ணையும் (''A'' = [[புரோட்டான்]]கள் மற்றும் [[நியூத்திரன்]]களின் மொத்த எண்ணிக்கை), இரட்டைப்படை [[அணு எண்]]ணையும் (''Z'' = புரோட்டான்களின் எண்ணிக்கை) கொண்டுள்ளன. இதன்மூலம் ஒற்றைப்படை நியூத்திரன்கள் தேவை எனப் புலனாகிறது. ஒற்றைப்படை நியூத்திரன்களைக் கொண்ட ஓரிடத்தான்கள் ஓர் கூடுதல் நியூத்திரனை உட்கொள்வதன் மூலம் சோடியாவதால் கூடுதலாக 1 to 2 MeV ஆற்றலைப் பெறுகிறது. இந்த ஆற்றல் விரைவற்ற நியூத்திரன்களால் அணுப்பிளவு வினைக்கான கூடுதல் ஆற்றலைத் தர போதுமானதாக உள்ளது. இந்தத் தன்மை ''பிளைவுறத்தக்க'' ஓரிடத்தான்கள் பிளைவுறு பொருட்களாக மாற முக்கியமானதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிளவுறுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது