"திவாகர நிகண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
"சேந்தன் திவாகரம்" நிகண்டு ஆனது, ஒரு சாராரால் "திவாகர நிகண்டு" எனவும் குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. '''திவாகர நிகண்டு''' என்னும் நூல் சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்பவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref> இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாக ஒரு சாராரால் கருதப்படுகின்றது.
 
இந்நூல் 12 தொகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. K. S. ஸ்ரீநிவாசபிள்ளையும், பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளையும் இப்பாட்டுக்களில் சிலவற்றைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளபோதும், அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எதனையும் கூறவில்லை. இவர்களின் பின்னர் தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்கள், இன்றுவரை இந்தப்பாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லை.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1274621" இருந்து மீள்விக்கப்பட்டது