"நா. பார்த்தசாரதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

337 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
சி
(*விரிவாக்கம்*)
[[படிமம்:N.parthasathi.jpg|thumb]]
'''நா.பார்த்தசாரதி''' ([[டிசம்பர் 18]], [[1932]] - [[டிசம்பர் 13]], [[1987]]) புகழ் பெற்ற தமிழ் [[புதினம்|புதின]] (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள [[கதை மாந்தர்|கதைமாந்தர்களைப்]] பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான [[குறிஞ்சி மலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]] மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும் வந்துள்ளன. [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[படிமம்:Na parthasarathy with journalists.jpg|300px]]
 
[[தமிழ்நாடு]], [[விருதுநகர் மாவட்டம்]] , [[சிவகாசி]] வட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.chennailibrary.com/parthasarathy/parthasarathy.html 'தீபம்' நா. பார்த்தசாரதி நூல்கள் இலவசமாக படிக்க - சென்னைநூலகம்.காம் (www.chennailibrary.com) ]
* [http://tamil.sifydinamani.com/artweekly_supplements/fullstorytamil_mani/article786651.php?id=643001ece நா. பா. என்றொரு குறிஞ்சிதீபம் மலர்தினமணி]
* [http://jeeveesblog.blogspot.com/2008/01/blog-post_20.html 'தீபம்' நா. பார்த்தசாரதி]
* [http://tamilnanbargal.com/person/%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF தமிழ் நண்பர்கள்]
 
{{சாகித்திய அகாதமி விருது}}
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1276655" இருந்து மீள்விக்கப்பட்டது