கனசதுரம் (படிக முறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
துணைத்தலைப்புகள் சேர்க்கை
வரிசை 43:
 
முகமைய கனசதுர அமைப்பானது '''அறுகோண நெருக்கப் பொதிவு''' அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்புடையது ஆகும், இவ்விரண்டு அமைப்புகளும் தங்கள் அறுகோண அடுக்குகளின் பொருந்துநிலைகளில் மட்டுமே வேறுபடுகின்றன. முக மைய கனசதுர அமைப்பின் [111] தளம் ஒரு அறுகோண படலமே ஆகும்.
 
==அலகறையின் வெற்றிடங்கள்==
 
பொதுவில் அணுக்கள் இன்ன பருமன் உடையது என்று உறுதியாய் வரையறுக்க இயலாதனவாய் இருந்தாலும், ஒரு படிக அமைப்பில் ஒன்றொடு ஒன்று அடுக்கி அணுக்கள் அமைகையில் அவற்றை ஒரு [[கோளம்|கோளமாய்]] கருத இயலும். இவ்வாறு அணுக்கோளங்கள் அமைகையில் அவற்றிற்கு இடையே வெற்றிடங்கள் இருக்கும், இதனையே '''வெற்றிடம்''' (Void) என்று அழைப்பர்.
 
சாதரண (அல்லது, மூல) கனசதுரம் நடுவில் மட்டும் ஒரே ஒரு வெற்றிடத்தைக் கொண்டது.
 
பொருள்மைய கனசதுரம் ஒவ்வொரு முகத்திலும் ஒன்று என ஆறு எண்முக வெற்றிடங்களைக் கொண்டது, ஆயினும் ஒவ்வொரு முகத்தின் வெற்றிடமும் இரண்டிரண்டு அலகறைகளால் பகிர்ந்துகொள்ளப்படுவதால், ஒரு அலகறை மூன்று வெற்றிடங்களை மட்டுமெ மொத்தத்தில் கொண்டிருக்கும். கூடுதலாய், ஒவ்வொரு எண்முகத்தைச் சுற்றியும் நான்முக வெற்றிடங்கள் இருக்கும், இவை எண்ணிக்கையில் 36 ஆகவும், மொத்தத்தில் 18 ஆகவும் இருக்கும். இந்த நான்முக வெற்றிடங்கள் உண்மையில் வெற்றிடங்கள் அல்ல என்றாலும் பல்லணு அலகறைகளில் இவை சிலவேளைகளில் தோன்றும்.
 
முகமைய கனசதுரம் அலகறையின் ஒவ்வொரு மூலையிலும், சற்றே மையத்திற்கு அருகில் என, எட்டு நான்முக வெற்றிடங்களைக் கொண்டிருக்கும், இவை ஆக மொத்தம் எட்டு நான்முக வெற்றிடங்களாகும். கூடுதலாய், அலகறையின் ஒவ்வொரு முனையின் மையத்திலும் ஒன்று என 12 எண்முக வெற்றிடங்களையும், அலகறையின் நடுவில் ஒரு எண்முக வெற்றிடத்தையும் கொண்டிருக்கும்.
 
==அணுப் பொதிவுக் கூறு (அல்லது அணு கட்டு பின்னம்)==
 
படிக அமைப்பின் முக்கியமானதொரு பண்பு அதன் '''[[அணு பொதிவுக் கூறு]]''' ஆகும். ஒத்த கோளங்களாய் கருதப்படும் அணுக்கள் ஓர் அலகறையின் மொத்த [[கொள்ளளவு|கொள்ளளவில்]] எத்துணை இடத்தை நிரப்புகின்றன என்ற [[விகதம்|விகதமே]] அணு பொதிவுக் கூறு ஆகும் (அதாவது ஓர் அலகறையின் அணுக்களின் மொத்த கொள்ளளவை அவ்வலகறையின் கொள்ளளவால் வகுக்கக் கிடைக்கும் பின்னம்.)
 
ஒரு மூல கனசதுர அணிக்கோவையில் ஒவ்வொரு அணிக்கோவை புள்ளியிலும் ஒரு அணு இருப்பதாய் கொண்டு, கனசதுரத்தின் பக்க நீளம் ‘a' எனக் கொண்டால், அணுவின் ஆரம் ‘a/2' ஆகும், இதன் அணு பொதிவுக் கூறு 0.542 எனவாகும் (இது மிக குறைவானது). அதே போல, ஒரு பொருள்மைய கனசதுரத்தில், அணு பொதிவுக் கூறு 0.680 ஆகவும், முகமைய கனசதுரத்தின் பொதிவுக்கூறு 0.740 ஆகவும் இருக்கும். கோட்பாட்டளவில், எல்லா அணிக்கோவைகளிலும் முகமைய கனசதுர அணிக்கோவையே மிக அதிக அணுப் பொதிவுக் கூற்றைப் பெற சாத்தியமானதாகும், எனினும் [[அறுகோண நெருக்கப் பொதிவு அணிக்கோவை|அறுகோண நெருக்கப் பொதிவு]] மற்றும் ஒருவகை நான்முக பொருள்மைய கனசதுரம் ஆகியவையும் கூட இதே அணுப் பொதிவுக் கூற்றை (0.740) பெருகின்றன.
 
ஒரு விதியாய், ஒரு திடப்பொருளில் இருக்கும் அணுக்கள் ஒன்றையொன்று கவர்கின்றன என்பதினால், அதிக நெருக்கமாய் பொதியப் பெற்ற அணு அமைப்புகளே அதிகவளவில் காணக்கிடைப்பன. (தளர்வாய் பொதியப் பெற்ற அமைப்புகளும் இயற்கையில் இருக்கின்றன, சில பிணைப்புக் கோணங்களுக்கு அவை ஏற்புடையதாய் இருப்பதினால்). இதனால், குறைந்த அணுப் பொதிவுக் கூறு உடைய மூல கனசதுர அமைப்பு இயற்கையில் மிக அரிதாகவே காணப்படுகிறது, [[பொலோனியம்|பொலோனியத்தில்]] இவ்வமைப்பே உள்ளது. ஆனால், அதிக அடர்த்தி கொண்ட பொருள்மைய கனசதுர மற்றும் முகமைய கனசதுர அமைப்புகள் இயற்கையில் மலிந்து கிடக்கின்றன. பொருள்மைய கனசதுரத்திற்கு எடுத்துக்காட்டுகள் [[இரும்பு]], [[குரோமியம்]], [[டங்ஸ்டன்]] மற்றும் [[நியோபியம்]]. [[அலுமினியம்]], [[செம்பு]], [[தங்கம்]] மற்றும் [[வெள்ளி]] ஆகியன முகமைய கனசதுரத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
 
==பல்தனிமச் சேர்மங்கள்==
 
ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்களால் ஆன [[சேர்மம்|சேர்மங்கள்]] ('''ஈர்தனிம சேர்மம்''' போன்றவை) பெரும்பாலும் கனசதுர அமைப்பை அடிப்படையாய் கொண்ட படிக அமைப்புகளையே பெற்றிருக்கின்றன. அதிகமாய் காணப்படும் சில சேர்மங்களின் அமைப்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.
 
===ஊடுருவும் மூல கனசதுர அமைப்பு (சீசியம் குளோரைடு)===
[[Image:CsCl crystal.png|125px|thumb|right|ஒரு [[சீசியம் குளோரைடு]] அலகறை. இருநிறப் பந்துகள் இருவகை அணுக்களைக் ([[சீசியம்]] மற்றும் [[குளோரின்]]) குறிக்கின்றன.]]
 
பல்தனிமச் சேர்மங்களின் அமைப்பில் ஒன்று '''“ஊடுருவும் மூல கனசதுர”''' அமைப்பு, இது '''“சீசியம் குளோரைடு”''' அமைப்பு என்றும் அறியப்படும். இதன் இருவேறு அணுக்களும் தனித்தனியாய் ஒவ்வொரு மூலகனசதுர அணிக்கோவையில் அமையும், ஒருவகை அணுவின் கனசதுரத்தின் மையத்தில் மற்றொரு வகை அணு அமையும். மொத்தத்தில், இவ்வமைப்பு பொருள்மைய கனசதுரத்தை ஒத்திருக்கும், ஆனால் வெவ்வேறு அணிக்கோவை புள்ளிகளில் (அதாவது, மூலை மற்றும் மையம்) வெவ்வேறு அணுக்கள் இருக்கும் (சீசியம் மற்றும் குளோரைடு போன்று, காண்க படம்).
 
இவ்வமைப்பு கொண்ட சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டாய் [[சீசியம் குளோரைடு|சீசியம் குளோரைடே]] இருக்கும், மேலும் குறைந்த வெப்பத்தில் அல்லது அதிக அழுத்தத்தில் தயாரிக்கப்படும் [[கார ஹாலைடு|கார ஹாலைடுகளும்]] இருக்கும். பொதுவில், இவ்வகை அமைப்பு ஒத்த அளவுடைய [[அயனி|அயனிகளைக்]] கொண்ட இரண்டு தனிமங்களின் சேர்மங்களில் காணக்கூடியதாகும் (சீசியம் குளோரைடில், சீசியம் அயனியின் Cs<sup>+</sup> ஆரம் 167 pm, குளோரைடு அயனியின் Cl<sup>-</sup> ஆரம் 181 pm ஆகும்).
 
இவ்வமைப்பின் இடக்குழு Pm{{overline|3}}m என்று அழைக்கப்படும் (ஹெர்மன் - மாகின் குறியீட்டுமுறையில்), அல்லது “221” என்று (படிகவுருவியலுக்கான சர்வதேச அட்டவணையில்). இதன் ஸ்ட்ரக்டர்பெரிச் குறிப்பெயர் “B2" என்பது.
 
இவ்வமைபில் உள்ள ஒவ்வொரு அணுவிற்கும் [[அணைவு எண்]] (coordination number) 8 ஆகும்: ஒரு மைய நேரயனி 8 மூலையில் உள்ள எதிரயனிகளோடும் அணைவு பெறும், அதேபோல ஒவ்வொரு மைய எதிரயனியும் 8 மூலைகளில் உள்ள நேரயனிகளோடு அணைவு பெறும், படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல்.
 
===இந்துப்பு அமைப்பு===
[[Image:NaCl polyhedra.png|200px|thumb|left|இந்துப்பு படிக அமைப்பு. [[எண்முக வடிவம்|எண்முக வடிவில்]], ஒவ்வொரு அணுவும் ஆறு நெருங்கிய அண்டை அணுக்களைப் பெற்றுள்ளது.]]
(இன்னும் எழுதப்படவில்லை)
===துத்தநாகக் கந்தக அமைப்பு===
[[Image:Sphalerite-unit-cell-depth-fade-3D-balls.png|150px|thumb|ஓர் துத்தநாகக் கந்தக அலகறை]]
(இன்னும் எழுதப்படவில்லை)
 
 
"https://ta.wikipedia.org/wiki/கனசதுரம்_(படிக_முறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது