பதிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது '''பதிகம்'''. நூலில் பாயும் பொருளைக் கூறுவது '''[[பாயிரம்]]'''. இரண்டும் பழமையான குறியீடுகள். இரண்டும் ஒரே பொருளை உணர்த்துவன. 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பை ஐங்குறுநூறு பத்து என்று குறிப்பிடுகிறது. <ref>வேட்கைப் பத்து, வேழப் பத்து, களவன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப் பத்து, தோழி கூற்றுப் பத்து, கிழத்தி கூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்பன [[ஐங்குறுநூறு]] [[மருதத்திணை]]யில் வரும் 100 பாடல்களின் பத்துப் பிரிவுகளுக்குத் தரப்பட்டுள்ள பெயர்கள்.</ref> இந்தப் பத்தின் அடுக்கினை ஆழ்வார் பாடல்களின் தொகுப்பு பத்து என்றே குறிப்பிடுகிறது. <ref>10 பாடல் கொண்டது ஒரு திருமொழி. 10 திருமொழி கொண்டது ஒரு பத்து. இப்படிப் பெரியாழ்வார் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.</ref> தேவாரத்தில் வரும் 10 பாடல்களின் தொகுப்பினைப் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர். <ref>கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருள்ளாறு பதிகம்.</ref> பிற்காலத்தில் பதிகம் என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின. <ref>[[பாய்ச்சலூர்பாய்ச்சலூர்ப் பதிகம்]], [[மயிலாப்பூர் பத்தும் பதிகம்]],</ref> [[பாட்டியல்]] நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம். <ref>[[பன்னிரு பாட்டியல்]] நூற்பா 312.</ref>
=== பாயிரம் என்னும் சொல் மொழி-வழக்கிற்கு வந்த காலம் ===
:[[பாயிரம்]] என்னும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்க நூல்களிலும் இல்லை. சங்கம் மருவிய காலத்து நூலான 'பழமொழி'யில்தான் பயிலப்பட்டுள்ளது.நல்லாட்சி புரியும் அரசன் ஒருவனை எதிர்க்க வரும் பகைவர்கள் பலராக ஒன்று திரண்டு 'பாயிரம்' கூறிக்கொண்டு வந்தாலும் ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் போல நல்லரசன் ஒருவன் தாக்கும்போது ஓடிவிடுவர் என்கிறது, பழமொழி பாடல். <ref>பழமொழி பாடல் எண் 249 கழகப்பதிப்பு</ref> அடுத்து, 'பெருங்கதை' நூலில் வருகிறது. இராசனை என்பவள் பந்தாடத் தொடங்கும்போது இப்படியெல்லாம் ஆடப்போகிறேன், கண் இமைக்காமல் எண்ணிக்கொள்ளுங்கள் என்று 'பாயிரம்' கூறிவிட்டுப் பந்தாடத் தொடங்கினாள் என்று வருகிறது. மானனீகை என்பவளும் இப்படிச் சொல்லிவிட்டுப் பந்தாடத் தொடங்கியிருக்கிறாள்,
"https://ta.wikipedia.org/wiki/பதிகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது