"காம்ப்டன் சிதறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கி இணைப்பு: lv:Komptona efekts)
காம்டன் சிதறல் மீள்மையில்லாச் சிதறலிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும், காரணம் சிதறும் ஒளியின் [[அலைநீளம்]] உள்வரும் கதிரின் அலைநீளத்திலிருந்து வேறுபடுகிறது. இருந்தும், இந்த விளைவின் தோற்றுவாய் ஒரு ஒளித்துகள் மற்றும் ஒரு எதிர்மின்னி ஆகிய இரண்டிற்கும் இடையிலான [[மீள் மோதல்]] என்றும் கொள்ளலாம். அலைநீளம் வேறுபடும் அளவு '''காம்டன் பெயர்வு''' என அழைக்கப்படும். ''அணுக்கரு காம்டன் சிதறல்'' இருக்கிறது என்றாலும், வழக்கத்தில் காம்டன் சிதறல் என்பது ஒரு அணுவின் எதிர்மின்னியை உள்ளடக்கிய சிதறலையே குறிக்கும். காம்டன் விளைவு 1923-இல் [[ஆர்தர் ஹோலி காம்டன்]] என்பவரால் [[புனித லூயிஸ்]]-இல் உள்ள [[வாஷிங்டன் பல்கலைக்கழகம்|வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில்]] கண்டுணரப்பட்டு, பின்னர் அவரது பட்டவகுப்பு மாணவன் [[ஒய்.எச். வூ]] என்பவரால் மேலும் உறுதிபடுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பிற்காக காம்டன் 1927ம் ஆண்டின் இயற்பியன் [[நோபல் பரிசு|நோபல் பரிசை]] பெற்றார்.
 
இது ஒரு முக்கியமான விளைவு காரணம் [[ஒளி]] என்பதை [[அலைத்தன்மை]] மட்டுமே கொண்டது என்ற அடிப்படையில் விவரிக்க இயலாது என்பதை இவ்விளைவு எடுத்துக்காட்டுகிறது. மின்னூட்டத் துகள்களினால் [[மின்காந்த அலை]]கள் சிதறடிக்கப்படுவதை விவரிக்கும் [[தாம்சன் சிதறல்]] என்னும் செவ்வியல் கோட்பாட்டினால் அலைநீளத்தில் ஏற்படும் தாழ் செறிவு பெயர்வை விளக்க இயலவில்லை. தாழ்ச்செறிவு காம்டன் சிதறலை விளக்க ஒளி துகள்களால் ஆனாதாய்ஆனதாய் இருக்க வேண்டும். ஒளி துகள்-போன்ற பொருட்களின் வெள்ளம் போல செயல்படுகிறது என்பதனை காம்டனின் சோதனை இயற்பியலாளர்களை ஏற்றுக்கொள்ள வைத்தது. அத்துகள்கள் ஒளித்துகள் எனப்படும், அவற்றின் ஆற்றல் ஒளியின் [[அதிர்வெண்]]ணிற்கு விகிதசமமாய் இருக்கும்.
 
எதிர்மின்னிக்கும் உயர் ஆற்றல் (எதிர்மின்னியின் நிலை ஆற்றலோடு ஒத்த, 511 keV) ஒளித்துகள்களிற்கும் இடையிலான வினை, ஆற்றலின் ஒரு பகுதி எதிர்மின்னிக்குத் தரப்பட்டு அது எகிறுவதையும், மிச்ச ஆற்றலுடனான ஒளித்துகள் [[திணிவுவேக அழியாமை]] பொருட்டு உள்வந்த திசையிலிருந்து வேறு திசையில் செல்வதையும் நிகழ்த்தும். இதற்குப் பின்னும் சிதறடிக்கப்பட்ட ஒளித்துகளில் போதுமான ஆற்றல் இருக்குமானல் இவ்வினை மீண்டும் (வேறொரு எதிர்மின்னியுடன்) நிகழும். இவ்விளைவில், எதிர்மின்னி கட்டற்றதாய் அல்லது இலேசான கட்டுடையதாய் கொள்ளப்படுகிறது. '''பொத்தே''' மற்றும் '''கெய்கரா'''லும், அதே போல் '''காம்டன்''' மற்றும் '''சைமனா'''லும் தனிப்பட்ட காம்டன் சிதறலில் திணிவுவேக அழியாமை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது '''பி.கே.எஸ் கோட்பாட்டி'''னைப் பொய்யென நிறுவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1278314" இருந்து மீள்விக்கப்பட்டது