"சார்கோமியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
{{Commonscat|Sarcomeres}}
சி (தானியங்கி இணைப்பு: zh:肌节)
({{Commonscat|Sarcomeres}})
சார்கோமியரை [[நுண்ணோக்கி]] வழியாக உற்று நோக்கினால் அடர்த்தியான (A கற்றை) மற்றும் அடர்த்தியற்ற கற்றைகள் (I கற்றை) மாறி மாறி அமைந்திருப்பதைக் காணலாம். A கற்றையின் மத்தியில் ஒரு குறைவான அடர்த்தியை உடைய பகுதி காணப்படுகிறது. அதற்கு H பகுதி என்று பெயர். I கற்றை ஒரு 'Z' வடிவக் கோட்டினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு சார்கோமியரிலும், இரண்டு அடுத்தடுத்த 'Z' கோடுகளுக்கு இடையே வரிசையாக Z கோடு, I கற்றை A கற்றை I கற்றை மற்றும் அடுத்த Z கோடு போன்ற அமைப்புகள் உள்ளன. [[எலக்ட்ரான் நுண்ணோக்கி]]யின் உதவிகொண்டு வரித்தசைகளை ஆய்வு செய்தபோது, தொடர்ச்சியாக அமைந்த 2 வகை புரத இழைகள், இத்தசைகளில் அமைந்திருப்பது தெரியவந்துள்ளது. A கற்றையில், சுருங்கும் தன்மையுடைய [[மையோசின்]] என்னும் புரதத்தினாலான தடித்த இழைகளின் தொகுதிகள் காணப்படுகின்றன. இந்த மையோசின் இழைகளின் விட்ட அளவு 110 A<sup>0</sup> மற்றும் நீளம் 1.5 மைக்ரான். இரண்டாவது தொகுதி நுண் இழைகள், (50 A விட்ட அளவு) A கற்றையின் நீள் இழைகளைத் தழுவி அமைந்துள்ளன. இரண்டாவது தொகுதி இழைகள் A கற்றையின் மீதும், ஓரளவிற்கு I கற்றையின் மீதும் நீண்டிருக்கின்றன. இக்கற்றைகள் ஆக்டின் என்னும் பொருளினால் ஆனவை. தசைநார்களின் சுருங்கும் செயலில், மையோசின், ஆக்டின், டிரோபோமையோசின் மற்றும் டிரோபோனின் ஆகிய நான்கு முக்கிய புரதங்கள் செயல்படுகின்றன. தசைநார்களின் செயல்களுக்கு தேவையான ஆற்றல் அகூக மூலக்கூறுகளிலிருந்து பெறப்படுகிறது.
 
{{Commonscat|Sarcomeres}}
[[பகுப்பு:மருத்துவம்]]
 
20

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1280169" இருந்து மீள்விக்கப்பட்டது