ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
''தங்கத் திருமேனியிலே - ஒரு''
''தகாத நோய் வந்ததென்ன...''
 
 
அத்தை அருங்கிளியே !
எந்தன் ஆரணங்கு பைங்கிளியே !
எங்கள் அஞ்சுகமே உறங்குதுன்னு
எங்க அருங்கிளிய காணலையே!
 
நீங்க பஞ்ச வர்ண பட்டுகட்டி
பவளங்க்கொண்ட மாலையிட்டு ! உங்க
பைம்பொரப்பு மாளிகைக்கு
பாடோருணா நீ நடந்தா! உந்தன்
பைம்பொறப்பு தங்கங்களோ! எங்க
பச்சக்கிளி வாருமுனு ! நாங்க
பத்தடுக்கு மாளி கட்டி ! அந்த
பத்தடுக்கு மாளியிலே
பழ வாழை மடல் விரித்து
பத்து வித கறி படைப்போம். எந்தன்
பாசமுள்ள பைங்கிளியே ! அந்த
பரமனோட சோர்சாதம் !
பார்த்தா ருசிகுதுனோ !
பக்கமிருந்தா மனகுதுனோ !
படுத்துறங்க போனீங்களோ !
 
நீங்க ஏல வர்ண பட்டுகட்டி
எட்டு வர்ண மாலையிட்டு ! உங்க
தேம்பிறப்பு மாளிகைக்கு
தேடோருணா நீ நடந்தா! உந்தன்
தேம்பிறப்பு தங்கங்களோ! எங்க
தேங்கிளியும் வாருமுனு ! நாங்க
தேனடுக்கு மாளி கட்டி ! அந்த
தேனடுக்கு மாளியிலே
தே வாழை மடல் விரித்து
எட்டு வித கறி படைப்போம். எந்தன்
நேசமுள்ள பைங்கிளியே ! அந்த
எமனோட சோர்சாதம் !
இருந்தா ருசிகுதுனோ !
கிட்டரிந்தா மனகுதுனோ !
கிடந்துறங்க போனீங்களோ !
 
==மனைவியின் ஒப்பாரி==
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பாரிப்_பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது