"நா. பார்த்தசாரதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

598 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:N.parthasathi.jpg|thumb]]
'''நா.பார்த்தசாரதி''' ([[டிசம்பர் 18]], [[1932]] - [[டிசம்பர் 13]], [[1987]]) புகழ் பெற்ற தமிழ் [[புதினம்|புதின]] (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள [[கதை மாந்தர்|கதைமாந்தர்களைப்]] பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான [[குறிஞ்சி மலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]] மற்றும் ''பொன் விலங்கு'' [[தொலைக்காட்சி|தொலைக்காட்சித்]] தொடர்களாகவும் வந்துள்ளன. [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றுள்ளார்.இவர் எழுதிய ''"சாயங்கால மேகங்கள்"'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1983|1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[தமிழ்நாடு]], [[விருதுநகர் மாவட்டம்]] , [[சிவகாசி]] வட்டத்தில் உள்ள நதிக்குடிநரிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].
 
[[1965]] இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1282473" இருந்து மீள்விக்கப்பட்டது