"சிதம்பர புராணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
#சிதம்பர மான்மியச் சருக்கம் – தில்லையில் நடம் புரியும் பெருமான் சிறப்பைப் கூறுகிறது. ஞானாகாயம், தில்லை, சிற்றம்பலம், பிரம்புரம், புண்டரீகபுரம் என்னும் பெயர்கள் [[சிதம்பரம்|சிதம்பரத்துக்கு]] உண்டு என்று தெரிவிக்கிறது.
#துன்மதச் சருக்கம் – துன்மதன் மதுரையில் வாழ்ந்த அந்தணன் ஒருவனின் மகன். அவன் எல்லா வகையான தீய ஒழுக்கங்களையும் உடையவனாயிருந்தான். அரசன் அவனை நாட்டை விட்டே அகற்றினான். துன்மதன் தில்லை வந்து சிவபெருமானின் ஆட்டம் கண்டு மகிழ்ந்தான். பின் தில்லையிலேயே வாழ்ந்தான். அங்கும் அவன் திருந்தவில்லை. காலம் வந்தபோது இறந்துபோனான். எமன் அவன் உயிரைக் கட்டி இழுத்துச் சென்றான். நந்திதேவர் அதனைத் தடுத்து, சிவன் நடனம் கண்ட புண்ணியத்தால் அவன் கட்டை அவிழ்த்து, சிவனடியில் சேர்த்துக்கொண்டார்.
#துச்சகன் சருக்கம் – துச்சகன் சேரநாட்டில் வாழ்ந்த கொடியவன். வஞ்சகன். [[கழறிற்றறிவார் நாயனார்|சேரலர் கோன்]] தில்லைக்கு வந்தபோது, அரசனின் ஏவலர் இவன் பொதி சுமக்கத் தக்கவன் என்று கருதி அவன் தலையில் தன் சுமைகளை ஏற்றி அழைத்துவந்தார். தில்லைக்கு வந்தபின் துச்சகன் வெப்புநோயால் இறந்துபோனான். தில்லை மண்ணை மிதித்த புண்ணியத்தால் இவன் சிவனடி சேர்ந்தான்.
#நியமச் சருக்கம் – சிதம்பரத்துக்கு வந்தவர் மேற்கொள்ள வேண்டிய நியமங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.
#சோமநாதச் சருக்கம் – சிவசன்மன் என்பவன் சோமநாதம் என்னும் ஊருக்குச் சென்றான். அங்கு, பலர் நெய்விளக்குப் போட வந்தனர். சிவசன்மன் தன்னையறியாமல் அருகிலிருந்த ஒருவரின் நெய்விளக்கைத் தட்டி விட்டுவிட்டான். அதனைக் கண்டுகொள்ளாமலும் சென்றுவிட்டான். இதன் பயனாக இவன் பேயாய்ப் பிறந்து விந்தாடவி என்னும் விந்தியமலைக் காடுகளில் அலைந்தான். அங்குச் சென்ற வாமதேவர் என்னும் முனிவர் அவன் பழம்பிறப்பில் செய்த தவறு இது எனச் சுட்டிக் காட்டினார். அதன் பின் அவன் சிவனையே நினைத்திருந்து, இறந்தபின் சிவனடி சேர்ந்தான்.
#துற்றெரிசனச் சருக்கம் – துற்றெரிசனன் என்னும் வேடன் வழியில் வந்த மறையவன் ஒருவனைக் கொல்ல முயன்றான். அப்போது மறையவன் கூறிய அறிவுரையைக் கேட்டு அவனுக்குக் குடை ஒன்று கொடுத்து அனுப்பிவைத்தான். மறையவன் அந்தக் குடையைத் தில்லைபெருமானுக்குச் சாத்தினான். இதன் பயனாக இருவரும் சிவனடி நிழல் பெற்றனர்.
*பதிப்பு – இந்த நூல் மதுரைத் திருஞான சம்பந்தர் ஆதீனப் பதிப்பாக 1856-ல் வெளிவந்துள்ளது. இந்த ஆதீனத்திடம் அன்பு பூண்டிருந்த [[வள்ளலார்|சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை]] இதற்கு அச்சுப்பிழை திருத்தி உதவியிருக்கிறார்.
 
==கருவிநூல்==
[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1282899" இருந்து மீள்விக்கப்பட்டது