"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (தானியங்கி இணைப்பு: fi:M. S. Subbulakshmi)
 
== இசை ஆர்வம் ==
இசைப்பின்னணியைக் கொண்ட குடும்பமாதலால் சிறுவயதிலிருந்தே சுப்புலட்சுமிக்கு இசையில் நாட்டம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவரது தாயாருடன் பல கச்சேரிகளிலும் இவர் பங்கேற்றதுண்டு. [[செம்மங்குடி சிறீனிவாச ஐயர்]], [[முசிறி சுப்பிரமணிய ஐயர்]], [[செம்பை வைத்தியநாத பாகவதர்]], [[ராஜ மாணிக்கம் பிள்ளை]], [[ராஜரத்தினம் பிள்ளை]], [[பாலக்காடு டி. எஸ். மணி ஐயர்]], [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] போன்ற ஜாம்பவான்கள் இடம் பெறும் இசை நிகழ்ச்சிகளை சிறுவயதிலேயே நேரில் சென்று ரசித்ததும் உண்டு. எம். எஸ். சுப்புலட்சுமி சிறு வயதில் தன் தாயாருடன் கச்சேரிகளுக்குச் சென்ற போது பெரிய கலைஞர்களே சுப்புலட்சுமியின் குரல் வளத்தை வாழ்த்தியதும் உண்டு. இவரது முறையான கல்வி ஐந்தாம் வகுப்பு வரையே அமைந்தது. இந்துஸ்தானி இசையை இவர் ''பண்டித நாராயணராவ் வியாசி''யிடமிருந்து கற்றார். ''அப்துல் கரீம்கான்'' மற்றும் ''பாதே குலாம்கானின்'' இசையையும் இவர் இரவு நேரங்களில் ரசிப்பதுண்டு.
 
1926ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.பி இசைத்தட்டில் ''"மரகத வடிவும்செங்கதிர் வேலும்"'' எனும் பாடலை சண்முகவடிவின் வீணையும், எம். எஸ். சுப்புலட்சுமி பாடலும் இணைந்து வெளிவந்தது. எம். எஸ். சுப்புலட்சுமியின் முதலாவது இசைத்தட்டு இது தான். மிருதங்க ஜாம்பவான் எனப் புகழபட்ட [[புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப்பிள்ளை]] தொடக்க காலத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் வளர்ச்சிக்கு மிக்க உதவியாக இருந்தார். அவரது மணிவிழாவில் எம். எஸ். சுப்புலட்சுமியின் கச்சேரி நடைபெற்றது. 1935ம் ஆண்டில் நடைபெற்ற இந்தக் கச்சேரி தான் எம். எஸ். சுப்புலட்சுமியின் சங்கீதத் திறனை வெளியுலகம் அறியச் செய்தது.
32,028

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1283225" இருந்து மீள்விக்கப்பட்டது