"கயிலை மலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
→கைலாச யாத்திரை
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: hu:Kajlás-hegy) |
|||
{{merge|கயிலை மலை}}
[[Image:Hindukailash.JPG|thumb|right|200px|கைலாய மலை பற்றிய இந்துக்களின் நம்பிக்கையை விளக்கும் ஒரு படம். சிவனும், பார்வதியும் குழந்தைகளான பிள்ளையார், முருகன் ஆகியோருடன் கைலாயத்தில் காணப்படுகின்றனர்.]]
'''கைலாயம்''' (கயிலாயம், நொடித்தான்மலை) [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[சீனா]]வில் [[இமயமலை]]யின் வடக்கில் அமைந்துள்ளது. [[மானசரோவர் ஏரி]]யும் [[சிந்து நதி|சிந்து]] முதலிய நதிகளும் இத்தலத்தின் தீர்த்தங்களாகும். இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகும்.
சம்பந்தர் தென் கைலாயம் எனப்படும் [[திருக்காளாத்தி]]யைத் தரிசித்தபின்னர் அங்கிருந்து இத்தலம் மீது பதிகம் பாடினார். [[சேரமான் பெருமாள்]] இத்தலம் மீது ''திருக்கயிலாய ஞான உலா'' பாடியுள்ளார்.
[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] குறிப்பிடப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவன் கைலாய மலையில் தனது துணைவியான பார்வதி தேவியுடன் உறைவதாக இந்துக்கள் நம்புகின்றனர். பல இந்து சமயப் பிரிவுகள் கையாயத்தை சுவர்க்கம் என்றும் ஆன்மாக்கள் இறுதியாகச் சென்றடைய வேண்டிய இடம் இதுவென்றும் கருதுகின்றன. கைலாய மலையை மிகப்பெரிய [[சிவலிங்கம்|லிங்கமாகவும்]], மானசரோவர் ஏரியை யோனியாகவும் உருவகப்படுத்தும் மரபும் உண்டு. [[விஷ்ணு புராணம்]] கைலாய மலை உலகின் மையத்தில் இருப்பதாகக் கூறுகின்றது.
==கைலாச யாத்திரை==
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கானவர்கள் கைலாய யாத்திரை மேற்கொள்ளுகிறார்கள். இது பன்னெடுங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு மரபாகக் கருதப்படுகின்றது. இந்துக்கள் மட்டுமன்றிப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கே வருகிறார்கள். கைலாய மலையை நடந்து சுற்றிவருவது சிறப்பானது என்பது பலரது நம்பிக்கை. 52 கிமீ (32 மைல்) நீளம் கொண்ட இப் பாதையில் நடந்து மலையைச் சுற்றுவது யாத்திரீகர்களின் ஒரு முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது.
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_kayilayam.htm தல வரலாறு, சிறப்புக்கள், அமைவிடம்]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=73 கோயில் வரலாறு]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
|