மின்காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64:
காந்தத்தின் அகணிப்பகுதியின் பதார்த்தமானது(வழமையாக [[இரும்பு]]), சிறிய காந்தங்களைப் போல் செயற்படும் ”காந்த ஆட்சிப்பகுதிகள்” எனப்படும் சிறு வலயங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்தத்தில் மின்னோட்டம் பாய்வதற்கு முன் இக் காந்த ஆட்சிப்பகுதிகள் எழுமாறான திசைகளைச் சுட்டியவாறு காணப்படும். ஆகவே அவற்றின் சிறிய காந்தப் புலங்கள் ஒன்றையொன்று சமப்படுத்திக் கொள்ளும். ஆகவே, இரும்பில் பெரியளவில் காந்தப்புலம் உருவாக மாட்டாது. அகணியின் மேல் சுற்றப்பட்டுள்ள கம்பியில் மின்னோட்டம் பாயும்போது சுருளில் உருவாகும் காந்தப்புலம் மெல்லிரும்பு அகணியை அதிரச் செய்வதன் மூலம் காந்த ஆட்சிப்பகுதிகளை காந்தப்புலத்துக்குச் சமாந்தரமாக ஒழுங்கமைக்கிறது. எனவே அவற்றின் சிறிய காந்தப்புலங்கள் ஒன்றுசேர்ந்து காந்தத்தைச் சூழ பெரிய காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கின்றன. மின்னோட்டம் அதிகரிக்கும் போது, காந்த ஆட்சிப்பகுதிகள் ஒழுங்கமையும் வீதமும் அதிகரிப்பதால், காந்தப்புலத்தின் வலிமையும் அதிகரிக்கும். எனினும் எல்லாக் காந்த ஆட்சிப்பகுதிகளும் இவ்வாறு ஒழுங்கமைந்த பின்னர் மின்னோட்டத்தின் அதிகரிப்பு பெரியளவில் காந்தப்புலத்தை அதிகரிக்க மாட்டாது. இந்நிலை "நிரம்பல் நிலை" என அழைக்கப்படுகிறது.
 
சுருளிலுள்ள மின்சாரம் துண்டிக்கப்படும்போது பெரும்பாலான ஆட்சிப்பகுதிகள் தமது ஒழுங்கமைவை இழந்து எழுமாறான நிலையை அடையும். ஆயினும் சில ஒழுங்கமைவுகள் மாற்றமடையாது காணப்படும். ஏனெனில் இவ்வாட்சிப்பகுதிகள் தமது திசையை மாற்றுவதில் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குகின்றன. இதனால் மின்காந்தத்தின் அகணி ஒரு வலுக்குறைந்த நிலைபேறான காந்தமாக மாறுகின்றது. இச் செயற்பாடு காந்தப்பின்னிடைவு எனப்படுகிறது. எஞ்சியுள்ள காந்தப்புலம் மீந்த காந்தப்புலம் எனப்படும். இவ் எஞ்சிய காந்தப்புலமானது காந்த நீக்கல் முறை மூலம் அகற்றப்படலாம்.
 
{{multiple image
|align = left
|image1 = Fermilab - 400 MeV Lambertson Magnet.jpg
|width1 = 160
|caption1 = டெவ்ரோன் [[துகள் முடுக்கி]]யில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்காந்தம், ஃபெர்மி ஆய்வுகூடம், அமெரிக்கா
|image2 = Laboratory electromagnet.png
|width2 = 106
|caption2 = 1910களில் பௌதிகவியல் பரிசோதனைகளில் பயன்படுத்தப்பட்ட ஆய்வுகூட மின்காந்தம்
|image3 = ICP-SFMS Magnet 1.JPG
|width3 = 80
|caption3 = திணிவுப் பகுப்பு மானியில் உள்ள காந்தம்
|image4 = Stator eines Universalmotor.JPG
|width4 = 140
|caption4 = [[மின்சார இயக்கி]]யின் நிலையியிலுள்ள ஆடலோட்ட மின்காந்தம்
|image5 = DoorBell 001.jpg
|width5 = 205
|caption5 = மின்மணியிலுள்ள காந்தம்
}}
{{-}}
 
==வரலாறு==
[[File:Sturgeon electromagnet.png|thumb|upright|ஸ்டேர்ஜனின் மின்காந்தம், 1824]]
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது