குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
தற்காலக் குடியரசுகளில் அதன் [[தலைவர்]] [[குடியரசுத் தலைவர்]] அல்லது சனாதிபதி எனப்படுவார். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் குடியரசுகளில், குடியரசுத் தலைவர் [[தேர்தல்]] மூலம் தேர்வு செய்யப்படுவார். சில குடியரசுகளில் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படுவார். [[ஐக்கிய அமெரிக்கா]], [[இலங்கை]] ஆகிய நாடுகளில் இந்த முறை உள்ளது. சில நாடுகளில் குடியரசுத் தலைவர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்படாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அவைகளால் தேர்வு செய்யப்படுவது வழக்கம். [[இந்தியா]]வில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய முறைகள் உள்ள குடியரசுகளில் குடியரசுத் தலைவரின் [[பதவிக் காலம்]] நான்கு தொடக்கம் ஆறு ஆண்டுகள் வரை வேறுபடலாம். இவ்வாறான குடியரசுகள் சிலவற்றின் [[அரசியல் சட்டம்|அரசியல் சட்டங்கள்]], ஒருவர் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகளுக்கு மேல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்படக்கூடாது என விதிப்பதும் உண்டு.
 
ஒரு நாட்டின் தலைவர் அந் நாட்டு அரசின் தலைவராகவும் இருப்பின், அது குடியரசுத் தலைவர் முறை (சனாதிபதி முறை) எனப்படும். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் இதற்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். [[குறைக் குடியரசுத் தலைவர் முறை]] உள்ள நாடுகளிலும், [[நாடாளுமன்றக் குடியரசு]]களிலும், [[நாட்டுத் தலைவர்|நாட்டுத் தலைவரே]] அரசுத் தலைவராகவும் இருப்பதில்லை. இவ்வாறான நாடுகளில் அரசுத் தலைவர் [[பிரதம அமைச்சர்]], பிரதம மந்திரி அல்லது பிரதமர் என அழைக்கப்படுவார். அரசின் கொள்கைகளையும், அரசையும் [[மேலாண்மை]] செய்யும் பொறுப்பு பிரதம அமைச்சருக்கு உரியது. சில நாடுகளில், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் தேர்வதற்கான விதிகள், அவ்விருவரும் வேறுவேறான கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதற்கும் இடமளிக்கின்றன. [[பிரான்ஸ்|பிரான்சில்]], ஆட்சியிலிருக்கும் அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை "ஒத்துவாழ்தல்" (cohabitation) எனப்படுகிறது. [[ஜேர்மனி]], இந்தியா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும்.
 
[[சுவிட்சர்லாந்து]], [[சான் மரீனோ]] போன்ற சில நாடுகளில் நாட்டின் தலைமை ஒருவரிடம் இருக்காமல், பலரைக் கொண்ட ஒரு குழு அல்லது அவையிடம் இருக்கும். முற்காலத்தில் [[ரோமக் குடியரசு]] ''கொன்சல்'' எனப்படும் இரண்டு நாட்டுத் தலைவர்களைக் கொண்டிருந்தது. நாட்டின் ஆட்சிச் சபையினால் ஓர் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்படும் இவர்கள், மாதத்துக்கு ஒருவராக மாறிமாறிப் பதவியில் இருப்பர். பதவியில் இருப்பவர் அதிகாரத்தில் இருக்கும் கொன்சல் எனவும், மற்றவர் துணைக் கொன்சல் ஆகவும் இருப்பர். எனினும் துணைக் கொன்சலுக்கு, ஓரளவு சுதந்திரமாக இயங்கக்கூடிய உரிமையும், தடுப்புரிமையும் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது