"தா. கி. பட்டம்மாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

107 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை)
| footnotes =
}}
'''டி. கே. பட்டம்மாள்''' என்று பரவலாக அறியப்படும் '''தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்''' ([[மார்ச் 28]], [[1919]] - [[ஜூலை 16]], [[2009]]<ref name=Pattammalpassesaway>[http://www.hindu.com/2009/07/17/stories/2009071757880100.htm The Hindu: Front page: Pattammal passes away]</ref>) ஒரு புகழ்பெற்ற [[கருநாடக இசை]]ப் பாடகி. [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]]ச் சேர்ந்தவர். [[1962]]-ம் ஆண்டில் [[சங்கீத நாடக அகாடெமி விருது]], 1971-ல் [[பத்மபூசன்]], 1998ம் ஆண்டில் [[பத்மவிபூசன்]], தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர். புகழ் பெற்ற பாடகி [[நித்யஸ்ரீ மகாதேவன்]], இவரது [[பேத்தி]] என்பது குறிப்பிடத்தக்கதுஆவார்.
 
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்<ref>[http://www.chennaionline.com/musicseason99/profile/dkpattammal.html Profile - Sangita Kalanidhi D.K.Pattammal]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/mp/2003/08/04/stories/2003080401540300.htm The Hindu : Chords and Notes]</ref>. மற்றவர்கள் [[எம். எஸ். சுப்புலட்சுமி]]யும் [[எம். எல். வசந்தகுமாரி]]யும் ஆவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
அலமேலு என்ற இயற்பெயருடைய “பட்டா” எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பட்டம்மாள் [[தமிழ்நாடு]] [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்திற்கு]] அருகில் உள்ள ''தாமல்'' என்ற ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஒரு சிறந்த பாடகி. அக்காலக் குடும்ப மரபுக்கேற்ப ராஜம்மாள் என்றும் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அந்த மரபுகளையும் தாண்டி பட்டம்மாள் தனது 4 ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார்<ref name=Musicwithfeeling>[http://www.hinduonnet.com/fline/fl1508/15080770.htm Music with feeling]</ref>. அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், [[டி. கே. ஜெயராமன்]] ஆகியோரும் சிறந்த பாடகர்கள். பட்டம்மாள் [[1939]] ஆம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பாரைத் திருமணம் செய்ய்துகொண்டார்.
 
==இசைத் துறையில்==
 
பட்டம்மாள் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அவரது சீடர்கள் [[ஜப்பான்]], [[சிங்கப்பூர்]], [[பிரான்சு]], [[ஜெர்மனி]], [[அமெரிக்கா]], [[கனடா]] முதலிய நாடுகளில் உள்ளனர். ஜப்பானிய '[[அகிகோ]]'வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார்.
 
==விருதுகள்==
*[[1962]]-ம் ஆண்டில் [[சங்கீத நாடக அகாடெமி விருது]]
* 1971-ல் [[பத்மபூசன்]],
* 1998ம் ஆண்டில் [[பத்மவிபூசன்]]
* தேசியகுயில்
* சங்கீதகலாநிதி
* கலைமாமணி
 
==மேற்கோள்கள்==
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1287285" இருந்து மீள்விக்கப்பட்டது