"முத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

663 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
சரியை என்பது பிறரிடம் நடந்துகொள்ளும் நடத்தை முறைமை. அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறை, அழுக்காறாமை, வெஃகாமை போன்ற இல்லற நடத்தைகளும், அவாவின்மை போன்ற துறவற நடத்தைகளும் [[திருக்குறள்]] காட்டும் ஒருக்க நெறிகள். இந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது ஒரு வழி.
:சிவதருமோத்தரம், சைவசமயநெறி, வாயுசங்கிரதை, மச்சபுராணம், பிரமோத்தர காண்டம், உபதேச காண்டம் முதலான நூல்கள் சரியை வழியைக் கூறுவன.
 
கிரியை என்பது செயல். விருந்தோம்பல், இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை, தீவினை அச்சம், பிறனில் விழையாமை முதலான நற்செயல்களால் முத்தி அடைதல் மற்றொரு வழி.
:தத்துவப்பிரகாசம் கிரியை வழியைக் கூறுவது.
 
யோகம் என்பது தவம். [[திருமூலர்]] இதனை [[அட்டாங்க யோகம்]] என்று கூறி விளக்குகிறார். <ref>[[திருமந்திரம்]], மூன்றாம் தந்திரம்</ref> இதனைக் கடைப்பிடித்து முத்தி பெறுவது இன்னொரு வழி.
 
ஞானம் என்பது மெய்யுணர்தல். இது உள்ளுணர்வு. இறைவன் தனக்குள்ளே. இறைவனுக்குள்ளே யான், இறைவன் வெளியே. வெளிக்குள்ளே யான் என்றல்லாம் உணர்ந்துகொண்டு செயலாற்றி வாழ்வதால் முத்தி பெறலாம் என்பது வேறொரு வழி.
:சிவநெறிப் பிரகாசம், தத்துவ ரத்னாகரம் போன்ற நூல்கள் ஞானவழி பற்றிக் கூறுகின்றன.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1287942" இருந்து மீள்விக்கப்பட்டது