"சங்கப் பாடல்களில் இராமாயணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
[[இராமன்|இராமனுடன்]] காட்டுக்கு வந்திருந்த [[சீதை]]யை [[இராவணன்]] வௌவிச் சென்றான். அவள் இராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்திருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.
 
==தனுஷ்கோடியில் இராமன் ([[அகநானூறு 70]])==
இந்தப் பாடலைப் பாடிய புலவர் [[கடுவன் மள்ளனார்]].
===சங்கப்பாடல் (பகுதி)===
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த<br />
பல்வீழ் ஆலம் போல<br />
ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' (அகநானூறு 70)
====செய்தி====
அவர் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டார். அவரையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1292373" இருந்து மீள்விக்கப்பட்டது