சங்கப் பாடல்களில் இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
:வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
:பல்வீழ் ஆலம் போல
:ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே' (<ref>அகநானூறு 70)</ref>
 
தலைவன் திருமணம் செய்துகொள்ள வந்துவிட்டான். அவனையும் உன்னயும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
வரிசை 23:
* [[கவுரியர்]] = பாண்டியர்<br />
இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் தன் ஒலியை அவித்து வைத்துக்கொண்டது. அதாவது ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக்கொண்டிருந்தன. (ஆல மரத்தடியில் குழுமியிருந்த மற்ற உயிரினங்களும் ஒலி எழுப்பாமல் வாய்மூடிக்கொண்டன.)
 
==பழமொழி நூலில் இராமாயணம்==
[[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல்களில் ஒன்று [[பழமொழி நானூறு]]. இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இவன் இராமனை நண்பனாகப் பெற்று இலங்கை அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது