சங்கப் பாடல்களில் இராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
சங்கப் பாடல்கள் இரண்டிலும், [[பழமொழி நானூறு]] பாடல் ஒன்றிலும் '''இராமாயணக் கதை''' பற்றிய குறிப்புகள் உள்ளன.
==சீதை செயல்==
[[ஊன்பொதி பசுங்குடையார்]] என்னும் புலவர் சோழ அரசன் [[சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி|இளஞ்சேட் சென்னியின்]] அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் [[செருப்பாழி]] ([[பாழி]], [[மிதியல் செருப்பு]]) என்னும் ஊரை வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை விரலில் செருகிக்கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை இடுப்பில் கட்டிக்கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால்,
 
:'கடுந்தெறல் இராமன் உடன் புணர் சீதையை
"https://ta.wikipedia.org/wiki/சங்கப்_பாடல்களில்_இராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது