"மின்காந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,877 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
மின்காந்தங்கள் பெரும்பாலும் பின்வரும் மின் மற்றும் மின்பொறியியல் உபகரணங்களில் பயன்படுத்தப்படுகிறது.
[[File:Industrial lifting magnet.jpg|thumb|upright|right|இரும்புத்துகள்களை தூக்க உதவும் மின்காந்த பாரந்தூக்கி, 1914]]
* [[மின்சார இயக்கி|மோட்டர்]]கள் மற்றும் [[மின்னியக்கி|மின்பிறப்பாக்கி]]கள்
* [[நிலைமாற்றி]]கள்
* [[அஞ்சல் சுற்று]]க்கள்
* [[மின்மணி]]
* [[ஒலிபெருக்கி]]
* [[காந்தப் பிரித்தெடுப்பு]]
* பாரந்தூக்கிகள்
 
== அயக்காந்த மின்காந்தங்களின் பகுப்பாய்வு ==
 
மின்காந்தங்களின் காந்தப்புலம் பொதுவாக அம்பியரின் விதியிலிருந்து தரப்படும்:
 
:<math>\int \mathbf{J}\cdot d\mathbf{A} = \oint \mathbf{H}\cdot d\mathbf{l}</math>
 
அதாவது, காந்தப்புலத்தில் யாதேனுமொரு மூடியசுற்றைச் சுற்றிய காந்தமாக்கும் புலம் H இன் தொகையீடு அச்சுற்றினூடாகப் பாயும் மின்னோடத்தின் கூட்டுத்தொகைக்குச் சமனாகும். இது தவிர பியோ சவார்ட்டின் விதியும் பயன்படுத்தப்படுகிறது. இது சிறு கடத்தியில் பாயும் மின்னோட்டம் காரணமாக உருவாகும் காந்தப்புலத்தைத் தரும்.அயக்காந்தப்பதார்த்தங்களால் உருவாகும் காந்தப்புலம் மற்றும் விசை ஆகியவற்றைக் கணிப்பிடுவது கடினமானதாகும். இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதற் காரணம், புலவலிமை வெவ்வேறு புள்ளிகளில் சிக்கலான முறையில் மாறுபடுவதாகும். இதனை முக்கியமாக அகணிக்கு வெளியிலும், வளியிடைவெளிகளிலும் அவதானிக்கலாம். இங்கு கீற்றணிப் புலங்களும் (fringing fields), மின்னொழுகு பாயமும் (leakage flux) கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அடுத்து, காந்தப்புலமும் (B) விசையும் மின்னோட்டத்துடன் நேர்விகிதசமனாக மாறுவதில்லை. இவை பயன்படுத்தப்படும் அகணிப்பதார்த்தத்தின் காந்தப்புலத்துக்கும் (B), காந்தமாக்கும் புலத்துக்கும் (H) இடையிலான தொடர்பில் தங்கியிருக்கும்.
 
==மேற்கோள்கள்==
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1292727" இருந்து மீள்விக்கப்பட்டது