இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசமைப்புச் சட்டம்''' (''Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka'') என்பது [[1978]] [[செப்டம்பர் 7]] ஆம் நாள் முதல் [[தேசிய அரசுப் பேரவை (இலங்கை)|தேசிய அரசுப் பேரவை]] விடுத்த அறிவிப்பை அடுத்து [[இலங்கை]]யில் நடைமுறையில் இருக்கும் [[அரசமைப்புச் சட்டம்]] ஆகும். இது இலங்கைக் குடியரசின் இரண்டாவதும், 1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடைமுறையில் இருக்கும் மூன்றாவது அரசமைப்புச் சட்டமும் ஆகும். {{As of|செப்டம்பர் 2010}} இச்சட்டம் 18 தடவைகள் திருத்தப்பட்டது.
 
==வரலாறு==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 சூலை தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]] (ஐதேக) ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, 1972 அரசமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 அக்டோபர் 4 இல் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (சனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]] 1978 பெப்ரவரி 4 இல் [[அரசுத்தலைவர்|அரசுத்தலைவரானார்]]. 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. இதன் படி, ஐதேக ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
 
1978 செப்டம்பர் 7 இல் அறிவிக்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்ற [[ஓரவை முறைமை]]யையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் பதவியையும் அங்கீகரித்தது. அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத்துக்கான காலம் ஆறு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்களில் பல்லுறுப்பினர் கொண்ட [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி, நாடாளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த எண்ணிக்கை 14வது திருத்தச் சட்டத்தில் 225 ஆக அதிகரித்தது.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_அரசியலமைப்புச்_சட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது