1,666
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
மன்னவன் கந்தப்பு (இயற்பெயர்- முருகேசு கந்தப்பு) ( கரவெட்டி, யாழ்ப்பாணம் பி:18.06.1926 இ: 15.02.2004) பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான இவர் கவிதை புனைதல், பட்டி மன்றப்பேச்சு என்பனவற்றில் திறமை காட்டியவர். அதிபராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்,
==இவரது தமிழ் ஆசான்கள்==
தமிழ் புலமையையும், கவி புனையும் ஆற்றலையும் தென்புலோலியூர் கந்தமுருகேசனாரிடம் கற்றுக்கொண்டவர். உயர் கல்வி பயிலும்பொழுதே இவரது தமிழ் ஆளுமையை அவதானித்த கலாநிதி சிவப்பிரகாசம் இவரை "மன்னவன்" என்று அழைக்கத்தொடங்கினார். பின்னர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவர்களுள் ஒருவராகவும் விளங்கினார்.
==இலங்கை வானொலியில்==
1960-1972 வரையிலான காலப்பகுதியில் இலங்கை வானொலியில் கவியரங்குகளில் பங்குபற்றி புகழ் பெற்றவர்.வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்ற இவர், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட.
==நிறுவிய இலக்கிய, சமூக அமைப்புகள்==
வடமராட்சியில் கம்பன் கழகத்தை நிறுவியதோடு, அங்கு கம்பன் விழாவை சிறப்புற நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். பண்டிதர் க.வீரகத்தியுடன் இணைந்து வாணி கலைக்கழகத்தை நிறுவி அதன் ஊடாக பண்டித வகுப்புகளை நடாத்தியவர். வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேசக் கலாசாரப் பேரவையின் உருவாக்கத்தில் பங்காற்றியவர்.
==கெளரவங்கள், விருதுகள்==
இந்து கலாசார அலுவல்கள் அமைச்சு 2001ம் ஆண்டில் இவருக்கு "கலைஞானகேசரி" என்ற விருதினை வழ்ங்கி கெளரவித்தது
வடமராட்சி தெKஉஜ்- மேற்கு பிரதேசக் கலாசாரப் பேரவை 2005ல் தமது வருடாந்த கலாசார விழாவின் ஒருநாள் நிகழ்வு அரங்கிற்கு இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது,
|
தொகுப்புகள்