மு. செ. விவேகானந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
பத்து வயதில் லோகிதாசனாக பாத்திரமேற்று நடித்ததில் இருந்து இவரது கலைவாழ்வு ஆரம்பமானது. கலைப்போதனாசிரியர் மு.பொன்னையா குருவாகவும் அண்ணாவியாராகவும் அமைந்தார். மு.செ.விவேகானந்தன் தான் ஆரம்பித்த நாடகமன்றத்திறகு தந்தையாரின் ஞாபகமாக அல்வாயூர்க்கவிஞர் நாடகமன்றம் என்றே பெயரிட்டிருந்தார். இவருக்கு சோடியாக பெண் பாத்திரத்தில் நடிப்பது இவரது மனைவியே.
 
அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன், நந்தனார், சத்தியவான் சாவித்திரி, நக்கீரர், பூதத்தம்பி, அசுவத்தாமன் ஆகிய இசைநாடகங்களிலும்; சகோதர பாசம், இதயத்துக்கு இதயம், ஆகிய சமூக நாடகங்களிலும்; வேடன், கண்ணப்பர், மார்க்கண்டேயர் ,ஆகிய பாத்திரங்களேற்று புராண நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகமணி வைரமுத்துவுடன் பூதத்தம்பியாகவும், பக்தநந்தனாரில் நந்தனாராகவும் நடித்தார். பிரதேச ஆலயங்களிலும் நிகழ்வுகளிலும் இசைக்கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். இவரது ‘காத்தவராயன்’ சிந்துநடைக்கூத்து, வெளிமாவட்டங்களில், குறிப்பாக கொழும்பில் பலதடவைகள் மேடையேறியுள்ளன.1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின்போது இவரது நாடகம் மேடையேற்றப்பட்டது.
 
போர்க்காலச் சூழ்நிலையில் [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] குடும்பத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் வன்னியிலும் தனது கலைப்பணியைத் தொடர்ந்துள்ளார். அங்கு [[புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு)|புதுக்குடியிருப்பு]] சிவன் கோயில் மீது பாடப்பட்ட பாடல்களை ஒலிநாடா வடிவமாக்கினார். புதுக்குடியிருப்பு கிருஷ்ணன் ஆலயத்தின் மீது ஊஞ்சற்பாடலை இயற்றிப் பாடினார்.
"https://ta.wikipedia.org/wiki/மு._செ._விவேகானந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது