விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
மலையாள விக்கி எங்கு முந்துகிறது என்றால், நம்மை விட சரி பாதி மக்கள் தொகை உள்ள மக்களாகிய அவர்கள் கிட்டதட்ட நம்மை ஒத்த அளவு புகுபதிகை செய்த பயனர்களைக் கொண்டுள்ளார்கள். நம்மை விட கூடுதலாக ஒவ்வொரு மாதமும் பங்களிக்கும் பயனர்களைக் கொண்டுள்ளார்கள். நம்மை ஒத்த அளவு மிக முனைப்பான பங்களிப்பாளர்களைக் கொண்டுள்ளார்கள். இது அவர்களின் இரட்டிப்பு வீச்சைக் காட்டுகிறது. நம்மை விட மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, இணைந்து செயற்பட்டு, பல முன்னோடித் திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள். ஆண்டு தோறும் நடத்தும் பங்களிப்பாளர் ஒன்று கூடல்கள், அரசு மூலம் பள்ளிகளில் அறிமுகமாக இருத்தல், விக்கிப்பீடியா தொடர்பான குறுந்தட்டுகளை வெளியிடல், அது தொடர்பான மென்பொருள்களை உருவாக்குதல் என்று இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வகையில் தான் நாம் மலையாள விக்கியை ஒப்பிட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். (அவர்களும் பல வகைகளில் நம்மை ஒப்பு நோக்கி கற்று வருகிறார்கள் என்பதும் உண்மை : ) )
 
கடந்த சில மாதங்களாக வெளியிடப்பட்டு வரும் விக்கி தரவுகள் முன்னுக்குப் பின் முரணாகவோ சரியான வகையில் பதிவாகாததாகவோ தோன்றுகிறது. எனவே, இவற்றை ஒரு குறிப்புக்குப் பார்த்து விட்டு நாம் வழமையான பணிகளை இன்னும் முனைந்து செய்வதே சரியாக இருக்கும். ''வெள்ளத்தனைய மலர் நீட்டம்'' என்பது போல் தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும் தரமும் இருக்கும். எனவே, இது தொடர்பாக நமது கவனத்தைச் செலுத்துவோம். மற்றவை தாமாக கை கூடும்--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:41, 11 செப்டெம்பர் 2012 (UTC) {{விருப்பம்}}--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 01:29, 12 செப்டெம்பர் 2012 (UTC) {{விருப்பம்}} -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 03:03, 12 செப்டெம்பர் 2012 (UTC) {{விருப்பம்}}-- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 03:35, 21 செப்டெம்பர் 2012 (UTC) {{விருப்பம்}} --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 03:49, 9 சனவரி 2013 (UTC)
 
===கட்டுரையளவு===