விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
:2005-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கன்னட விக்கி விரைவாக வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் விக்கியில் இருந்த பயனர்கள் எண்ணிக்கையும் குறைவு. ஒரு போட்டியுணர்வு இருந்தாலும் வெறும் கட்டுரை எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் அப்போதைய முன்னுரிமைகளான இடைமுகம்-மென்பொருள் வழு நீக்கல், தமிழாக்கம், அடுத்து புதுப்பயனர்களைக் கவர்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். கன்னட விக்கியில் என்ன சிக்கல் என உறுதியாகத் தெரியாது, ஆனால் அங்கு பெரும் தேக்கம் ஏற்பட்டுவிட்டது, மீள முடியாமல் உள்ளனர். அடுத்து இந்தி விக்கியும் தெலுங்கு விக்கியும் கட்டுரை எண்ணிக்கையைக் குறிவைத்துச் செயல்பட்டனர். மராட்டி விக்கியில் ஒரு சொல் கட்டுரைகளை இட்டு வைத்தனர். கட்டுரை நீளம் குறைவானதால் ஆங்கில உள்ளடக்கத்தைப் போட்டு வைத்தார்கள். விளைவு, குப்பை களையப்படாமலேயே உள்ளது, தேங்கியும் நிற்கிறது. தெலுங்கில் மாற்றம் கொணடு வந்து கொணடிருக்கிறார்கள். வங்க விக்கியில் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக கூகுள் கட்டுரைகள் நிறைய ஏற்றப்பட்டன, இதனால் எண்ணிக்கை கூடினாலும் குப்பை பெருகியது. அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுத்து களையெடுத்தார்கள். இதற்கிடையில் மலையாள விக்கியும் தமிழ் விக்கியும் தான் தரத்திலும், பங்களிப்பிலும் கவனம் செலுத்தின. இன்று தலை நிமிர்ந்து எடுத்துக்காட்டு விக்கிக்களாக உள்ளோம்.
 
:இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்தாலும் விரைவு பொருட்டு [[விக்கிப்பீடியா:தரக் கண்காணிப்பு|தரத்தையோ]] அடிப்படைக் கோட்பாடுகளையோ விட்டுவிடாமல் வளரும் வழிகளை ஆராய வேண்டும். (உடைந்த கண்ணாடிக் கோட்பாட்டின்படி தரம் குறையக் குறைய மேலும் குப்பைதான் சேரும்.) -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 16:21, 11 செப்டெம்பர் 2012 (UTC)
===விக்கி தரவுகள் கண்காணிப்பு ===
சுப்பிரமணி, நாம் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில், அதுவும் உலகளவிலோ இந்திய அளவிலோ எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது ஒரு பொருட்டே அன்று. இது போன்ற ஒப்பீடுகளை அவ்வப்போது பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருந்தவோ விட்ட இடத்தைப் பிடிக்க முனையவோ தேவை இல்லை. நாம் ஓடுவது ஒரு பந்தயம் என்பதை விட நமது தேவைக்காக ஓடுகிறோம் என்பதே முக்கியம். ஆங்கில விக்கிப்பீடியாவை அனைவரும் நாடுவது போன்று தமிழ் மக்கள் அனைவரும் திரும்பத் திரும்ப வந்து படித்துப் பயன்பெறக்கூடிய அளவுக்குத் தரமாகவும் அனைத்துத் தலைப்புகளிலும் கட்டுரைகள் ஆக்கும் வரை நாம் எத்தனை இலட்சம் கட்டுரைகள் கொண்டிருந்தாலும் எத்தனையாவது இடத்தில் இருந்தாலும் பயன் இல்லை. எனவே, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று வரையறுத்து, அதை நோக்கி சீராகவும் தொடர்ந்தும் மிகவும் காலம் தாழ்த்தி விடாலும் ஓட வேண்டும் :)