"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

194 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின்போது, ரசியாவின் மக்கள்தொகை சோவியத் ஒன்றிய மக்கள்தொகையின் அரைப்பங்காக இருந்த போதிலும், ரசியா சோவியத் ஒன்றியத்தின் வெளிக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டது.<ref>{{cite web|title=Russia pays off USSR's entire debt, sets to become crediting country|publisher=Pravda.ru|url=http://english.pravda.ru/russia/economics/22-08-2006/84038-paris-club-0|accessdate=27 December 2007}}</ref> உயர் பாதீட்டுப் பற்றாக்குறை காரணமாக 1998ல் நிதி நெருக்கடி ஏற்பட்டது.<ref>{{cite web|url=http://www.iie.com/publications/papers/aslund0108.pdf|title=Russia's Capitalist Revolution|author=Aslund A|accessdate=28 March 2008|format=PDF}}</ref> இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் வீழ்ச்சியடைந்தது.<ref name=OECD>{{cite web|title=Russian Federation|publisher=Organisation for Economic Co-operation and Development (OECD)|url=http://www.oecd.org/dataoecd/7/50/2452793.pdf|accessdate=24 February 2008|format=PDF}}</ref>
 
டிசம்பர் 31, 1999ல் யெல்ட்சின் சனாதிபதிப் பதவியிலிருந்து விலகி ஆட்சிப்பொறுப்பை அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த [[விளாடிமிர் பூட்டின்|விளாடிமிர் புட்டினிடம்]] ஒப்படைத்தார். 2000ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலிலும் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். வட காக்கசஸ் பகுதிகள் சிலவற்றில் வன்முறைகள் இடம்பெற்றாலும், செச்சென் கிளர்ச்சியை புட்டினால் அடக்கக் கூடியதாயிருந்தது. உள்நாட்டுத் தேவை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றிலான உயர்வு, உயர் எண்ணெய் விலை மற்றும் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியன காரணமாக அடுத்த ஒன்பது வருடங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் ரசியாவின் வாழ்க்கைத்தரமும், அதன் உலகளவிலான ஆதிக்கமும் அதிகரித்தது.<ref name=cia>{{cite web|last=The World Factbook|title=CIA|publisher=Central Intelligence Agency|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/rs.html|accessdate=26 December 2007}}</ref> புட்டினின் பதவிக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் மேற்கத்தேய நாடுகளால் சனநாயக முறையற்றது என விமர்சிக்கப்பட்டாலும்,<ref>{{cite web|author=Treisman, D|title=Is Russia's Experiment with Democracy Over?|url=http://www.international.ucla.edu/article.asp?parentid=16294|publisher=UCLA International Institute|accessdate=31 December 2007}}</ref> புட்டினின் தலைமைத்துவத்தின் கீழான நாட்டின் உறுதிநிலை மற்றும் வளர்ச்சி காரணமாக ரசியா முழுவதும் புடினின் செல்வாக்கு அதிகரித்தது.<ref>{{Cite news|author=Stone, N|title=No wonder they like Putin|url=http://www.timesonline.co.uk/tol/comment/columnists/guest_contributors/article2994651.ece|work=The Times |location=UK |accessdate=31 December 2007|date=4 December 2007}}</ref>
 
மார்ச் 2, 2008 அன்று, [[திமித்ரி மெட்வெடெவ்]] ரசிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, புட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 சனாதிபதித் தேர்தலையடுத்து, புடின் சனாதிபதியானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
3,281

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1298057" இருந்து மீள்விக்கப்பட்டது