பதிவுத் திருட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''பதிவுத் திருட்டு''' அல்ல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:06, 12 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பதிவுத் திருட்டு அல்லது உள்ளடக்கத் திருட்டு (content theft)[1] என்பது வலைத்தளங்களில், வலைப்பதிவுகளில் காணப்படும் ஒருவர் படைப்பை இன்னொருவர் நகலெடுத்து இடும் செயற்பாட்டை குறிக்கும் சொல்வழக்காகும். தமிழ் வலைப்பதிவினர் இடையேயும் இவ்வாறான அடுத்தவர் படைப்புகளை தமது படைப்பாக வெளியிடும் அல்லது இடும் செயல்பாடுகள் காணப்படுகின்றன.[2][3][4] இவ்வாறான செயற்பாடுகள் எதனையும் தாமாக சிந்திக்காமல், ஒன்றைப் பற்றி போதிய அறிவு இல்லாமல், படிக்காமல், தேடல் இல்லாமல் பதிவிட விளைவதால் ஏற்படுகின்றன. இது இணைய உலகில் எந்த ஒரு பதிவையும் வெட்டி ஒட்டி விடலாம் என்பதால் எளிதாக நடைப்பெறுகிறது. இதனை ஒரு அநாகரிகமான செயற்பாடாகவும் திருட்டுச் செயலாகவுமே வலைப்பதிவுலகில் பார்க்கப்படுகிறது. [5]

  1. Types of Content Theft
  2. பதிவுத் திருட்டு
  3. பதிவுத் திருட்டு - உஷார்
  4. தமிழ் பதிவுலகம் வளர வளர , பதிவுத் திருட்டும் வளர ஆரம்பித்துள்ளது.
  5. பதிவுத் திருட்டு பரவி வரும் அநாகரீகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவுத்_திருட்டு&oldid=1298147" இலிருந்து மீள்விக்கப்பட்டது