ஈயடிச்சான் கொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
ஒரு பாடசாலையில் புதிதாக இணைந்துக் கொண்ட ஆசிரியர் ஒருவர் ஒரு விடயம் தொடர்பில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதிவரும் படி மாணவர்களை பணித்தார். மாணவர்கள் அவ்விடயம் தொடர்பில் பாடப் புத்தகத்தில் மட்டுமன்றி, மேலும் பல்வேறு ஆய்வுகள் செய்து; ஆய்வறிக்கைகள், நூல்கள் போன்றவற்றை வாசித்து சான்றுகள், மேற்கோள்கள் சகிதம் ஆய்வுக் கட்டுரையை எழுதினர். அவர்களில் திறமையான மாணவர் ஒருவர் தனது ஆய்வுக் கட்டுரையின் மேலதிக விளக்கத்திற்காக சில படங்களை பசை தடவி ஒட்டி விளக்கத்துடன் எழுதினார். எழுதிமுடிந்தவுடன் தனது அப்பியாசப் புத்தகத்தை மூடிவைத்தார். மூடி வைக்கும் போது இடையே சிக்கிக்கொண்ட '''ஈ''' ஒன்று அந்த கட்டுரையில் ஓரிடத்தில் ஒட்டுப்பட்டு விட்டது.
 
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எவ்வித ஆய்வும் செய்யாத மாணவர் ஒருவர், மேற்கூறப்பட்ட மாணவரின் அப்பியாசப் புத்தகத்தை அவருக்கும் தெரியாமல் எடுத்து அப்படியே நகலெடுத்தார். படங்களையும் அப்படியே பசை தடவி ஒட்டினார். அதில் உள்ள தகவல்கள் சான்றுகள் போன்றவற்றை அவர் சரிபார்க்கவோ உறுதிப்படுத்திக்கொள்ளவோ இல்லை. நகலெடுத்ததை நகலெடுத்த மாணவர் குறிப்பிட்ட மாணவருக்கும் முன்பாக ஆசிரியர் வகுப்புக்கு வந்தவுடன் சமர்பித்தார். வகுப்பில் எல்லோரதும் ஆய்வுக் கட்டுரைகளை பார்த்த ஆசிரியர் ஒரே மாதிரி இரண்டு கட்டுரைகள் இருப்பதைக் கண்டார். இந்த இரண்டில் எந்த ஆய்வுக் கட்டுரை போலியானது என்பதை கண்டறிய முற்பட்டார். இருவருடைய அப்பியாசக் கொப்பியிலும் ஈ ஒட்டப்பட்டிருப்பதையும் கண்டார். குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரைக்கு பொறுத்தமில்லாத வகையில் இந்த ஈ ஏன் ஒட்டப்பட்டுள்ளது என்பதில் கேள்விகள் எழுப்பினார். நகலடித்த மாணவர் பிழையை நியாயப்படுத்த பல்வேறு பதில்கள் கூறினார். அதேவேளை பல்வேறு ஆய்வுகள் செய்து ஆய்வுக் கட்டுரை எழுதிய மாணவரிடம் கேட்டப்போது, நான் எனது கட்டுரையில் ஈயை ஒட்டவில்லை. அது தவறுதலாக அப்பியாசக் கொப்பி மூடப்படும் போது ஒட்டுப்பட்டிருக்கும் என விளக்கம் அளித்தார். அப்பதிலின் ஊடாக ஆசிரியர் நகலெடுத்த அல்லது கொப்பியடித்த மாணவர் யார் என்பதை இணங்கண்டுகொண்டார். அச்செயலைத் தொடர்ந்து பேச்சு வழக்கில் "கொப்பியடிச்சான்" என வழங்கப்பட்டு வந்த சொல்வழக்கு "ஈயடிச்சான் கொப்பி" எனும் சொல்வழக்காக பயன்பாட்டில் நிலைபெற்றதுநிலைபெற்றுவிட்டது. இவ்வாறு "ஈயடிச்சான் கொப்பி" என்பதற்கான ஒரு விளக்கக் கதை சொல்லப்படுகிறது.
 
==செயற்பாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஈயடிச்சான்_கொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது