கண்ணகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 8:
 
==கோவலன் மனைவி==
'''கண்ணகி''', [[தமிழ்|தமிழில்]] எழுந்த [[ஐம்பெருங் காப்பியங்கள்|ஐம்பெருங் காப்பியங்களில்]] ஒன்றான [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் [[பாண்டியர்|பாண்டிய]] அரசன் [[நெடுஞ்செழியன்|நெடுஞ்செழியனிடம்]] வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசி [[கோப்பெருந்தேவி]]யும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, [[மதுரை]] நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
 
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர் மற்றும் இடைக்காட்டுச் சித்தர் ஆகியோர் ஆயர் குலத்தை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்கள்.
 
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், [[சேர நாடு|சேர நாட்டு]] மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் [[பண்டைய இலங்கை|இலங்கை]] மன்னன் கஜபாகுவும் கலந்துகொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கண்ணகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது