விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 440:
 
==ஆங்கில கட்டுரைகளை படியெடுப்பதில் கவனம்==
நாம் அநேகமான கட்டுரை உருவாக்கத்திற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே படியெடுத்து மொழிமாற்றிவிடுகிறோம் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்கிறோம். கட்டுரை தொகுப்புக்கே நாம் முன்னுரிமை கொடுப்பதால், ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளின் தகவல்கள் சரியானதா என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அங்கே வழங்கப்பட்டிருக்கும் சான்றுகள் சரியானதா என உறுதிப்படுத்தவும் தவறிவிடுகிறோம். நான் அன்மையில் பார்த்ததில் அங்கே (அநேகமான இலங்கைச் சார்ந்த கட்டுரைகளில்) பக்கச்சார்பாக சிலரின் போலியான சான்றுகள், இல்லாத நூல்களை சான்றாக முன்வைத்தல், திசைத்திருப்பும் எரிதச் சான்றுகள், ஏமாற்றுச் சான்றுகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எ.கா: [[:en:Colombo]] எனும் கட்டுரையில் '''கொலம்ப''' எனும் சொல்விளக்கத்திற்கு "Indrapala 2007, p. 70" என ஒரு சான்று வழங்கியுள்ளார்கள். தேடிப்பார்த்ததில் இப்படி ஒரு நூல் 2007ல் <s>வெளிவரவில்லை.</s> காணப்படவில்லை. இது ஒரு போலிச் சான்று. "கொழும்பு" எனும் சொல் தொடர்பில் தமிழில் சொல்விளக்கம் [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=29330 உள்ளது.] இது குறித்த எந்த தகவலோ சான்றோ அங்கு வழங்கப்படவும் இல்லை. நாம் இங்கு வழங்கப்படவும் இல்லை. ஆங்கில கட்டுரையை அப்படியே படியெடுத்து இங்கே [[கொழும்பு]] கட்டுரையில் இட்டுள்ளோம். இது சரியான நடைமுறையல்ல. மேலும் [[:en:Tea_production_in_Sri_Lanka]] கட்டுரையில் [http://www.eswaran.com/History.pdf] ஒரு வெற்றுப்பக்கத்தை சான்றாக கொடுத்துள்ளனர். இப்படி இன்னும் பல சித்துவேலைகள் உள்ளன. எனவே ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் இவற்றையும் கவனம் கொள்ளல் வேண்டும். பார்க்க [[ஈயடிச்சான் கொப்பி]] --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 07:26, 12 சனவரி 2013 (UTC)
 
: இது போன்ற பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன். ஒரு ஆண்டில் வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில நூல்களையும் பட்டியலிடும் தளம் ஏதாவது இருக்கின்றதா? நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா? --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 15:41, 12 சனவரி 2013 (UTC)
:://Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன்.// நூலாசிரியரின் பெயரை நூலாக குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதுஅதுவும் ஒரு திசைத்திருப்பல் செயல்பாடுதான். //நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா?// தேடிப்பார்த்ததில் (திருத்தியுள்ளேன்) காணப்படவில்லை என்று வாசியுங்கள். மேலும் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவு தளம், இதில் முதலாம், இரண்டாம் நிலை தரவுகளின் ஊடாக சான்றுகளை முன்வைத்து தொகுத்து வைக்கப்படுகிறது. எனவே ஒரு நூலை சான்றாக வழங்கும் போது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் எனும் முறையுண்டு. பார்க்க: [http://en.wikipedia.org/wiki/Wikipedia:Citing_sources#Books] குறிப்பாக ஒவ்வொரு நூலுக்கும் ISBN இலக்கம் உண்டு. ஒரு கட்டுரையை வாசிக்கும் ஒரு நபர் அக்கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் சான்றை உறுதிப்படுத்திக்கொள்ளவோ அல்லது மேலதிக வாசிப்பிற்காகவோ வழங்கப்பட்டிருக்கும் சான்று சரியாக இருக்கவேண்டும். இணையத்தளங்களை சான்றாக வழங்கியிருப்பவை, அவ்விணைத்தளம் செயல்பாட்டில் இல்லாதப் போது இணைப்பு நீக்கப்படுவதும் அதனால் தான்.--[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 17:14, 12 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது