மூலக்கூற்று வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
சில மூலக்கூறுகளும் அணுக்களும் சில வகை மூலக்கூறுகளில் அடைக்கப்பட்டு காணப்படும். அதாவது உள்ளேயுள்ள மூலக்கூறு அல்லது அணுவானது அதனைச் சூழவுள்ள மூலக்கூறுடல் வேதியல் பிணைப்பைப் பேணாமல் வெறுமனே அடைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக [[பக்மின்ஸ்டர்ஃபுலரின்]] (C<sub>60</sub>) மூலக்கூறில் அடைக்கப்பட்டுள்ள அணுவோடு (M) அம்மூலக்கூறின் வாய்ப்பாடை வழமையாக MC<sub>60</sub> என்றே எழுதப்படும். எனினும் M உம் C<sub>60</sub> உம் வேதியல் தொடர்பைப் பேணாமை இவ்வாய்ப்பாடால் காட்டப்படவில்லை. @ குறியீடைப் பயன்படுத்துவதால் இவை இரண்டும் வேதியல் பிணைப்பைப் பேணவில்லை என்பதைக் காண்பிக்கலாம். அதாவது பக்மின்ஸ்டர்ஃபுலரினின் மூலக்கூறு வாய்பாடை M@C<sub>60</sub> என எழுத முடியும்.
 
==குன்றுஹில் முறை==
 
[[குன்றுஹில் முறை]] என்பது மூலக்கூறு வாய்ப்பாட்டை எழுதும் ஒரு முறையாகும். இங்கே முதலில் கார்பன் குறியீடும் பின்னர் ஐதரசன் குறியீடும் அதன் பின்னர் ஆங்கில நெடுங்கணக்கு வரிசையில் அணுக்களின் குறியீடுகள் எழுதப்படும். மூலக்கூறில் கார்பன் அணு இல்லாவிட்டால் நெடுங்கணக்கு வரிசையின் படி மூலக்கூறு வாய்ப்பாடு எழுதப்படும். இம்முறையானது மூலக்கூறு வாய்ப்பாட்டில் இலகுவாக அணு எண்ணிக்கைகளைத் தேடியறிய உதவும்.
{{stub}}
 
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று_வாய்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது