முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய [[இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்|பணியிடம் வெறுமையாகும் வேளையில்]] சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும். இக்காலத்தில், [[திருச்சபை|திருச்சபையின்]] அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும். ஆயினும் இக்காலத்தில் கர்தினால் குழு சிறப்புத் சட்டத்தில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே கொண்டிருக்கும். தனிப்பட்ட கர்தினால்கள்கள், இறந்த திருத்தந்தை தங்களுக்கு கொடுத்திருந்த உரோமைச் செயலகப் பொறுப்புகளையும், திருத்தந்தை தூதர்களாக அவர்கள் வகித்தப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் இழப்பர். இப்பொறுப்புகள் புதிதாய் தேர்வு செய்யப்படும் திருத்தந்தையால் மீண்டும் உறுதி செய்யப்படும் வரை இவர்களால் நிரைவேற்ற முடியாது.
 
===அன்றாடப் பணிகள்===
கர்தினால் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதும், திருத்தந்தை வேண்டும்போது அவருக்கு தனியாகவோ, குழுவாகக் கூடியோ ஆலோசனை வழங்குவதும் கர்தினால்களின் பணிகளுள் அடங்கும். மேலும், கர்தினால்கள் அதிமுக்கிய ஆய்வுக்குரிய பொருள்களைப் பற்றி விவாதித்திட அழைக்கப்படும்போது திருத்தந்தைக்குக் குழுவாக உதவி புரிகின்றனர்; பெரும்பான்மையான கர்தினால்களுக்கு மேலதிக பணிகளும் உண்டு. மறைமாவட்டங்களை நிர்வகித்தல், உரோமைத் திருப்பீடத்தின் செயலகங்களுக்குத் தலைவராக இருத்தல் போன்ற பணிகளையும் கர்தினால்கள் செய்கின்றனர்.
 
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1305258" இருந்து மீள்விக்கப்பட்டது