சிந்துவெளி முத்திரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சிந்துவெளி முத்திரை''' எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
==பயன்பாடு==
இம்முத்திரைகள் எதற்குப் பயன்பட்டன என்பது குறித்துத் தெளிவு இல்லை. எனினும், இவை வணிகப் பொருட்களுக்கு முத்திரை இடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்து. [[மெசொப்பொத்தேமியா]] போன்ற தொலைதூர இடங்களிலும் இவ்வகை முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது இக்கருத்துக்கு வலுவூட்டுகின்றது.
 
==உருச் செதுக்கல்கள்==
முத்திரைகளின் முன்புறத்தில் இருக்கும் மனித, [[விலங்கு]], [[தாவரம்|தாவர]] உருவங்கள் தனித்தனியாகவும், சேர்ந்தும் காணப்படுவதுடன், சிக்கலானவையாகவும், குறியீட்டுத் தன்மையுடன் கூடியனவாகவும் உள்ளன. மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இவ்வுருவங்களிற் பல கலப்புப் பிராணிகளாக உள்ளன. சில விலங்கு இயல்புகளைக் கொண்ட மனித உருவங்களாகவும் இருக்கின்றன. முத்திரைகளில் காணப்படும் விலங்குகளுள், [[ஒற்றைக்கொம்பன்]] உருவமே மிகவும் அதிகமாகக் காணப்படுவது. [[எருது]], [[புலி]], [[யானை]] போன்ற விலங்கு உருவங்களும் உள்ளன.
 
சில முத்திரைகளிற் காணப்படுகின்ற உருவங்கள் சமயம் சார்ந்த உட்பொருள் கொண்டவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சில முத்திரைகளில் யோகியைப் போன்று அமர்ந்த நிலையிலான உருவங்கள் உள்ளன. ஒரு முத்திரையில், இவ்வாறான யோகநிலை உருவமும் அதைச் சூழ அவ்வுருவத்தை நோக்கியவாறு நான்கு விலங்குகளின் உருவங்களும் உள்ளன. இது "பசுபதி" என அழைக்கப்படும் [[இந்து சமயம்|இந்துக்]] கடவுளான [[சிவன்|சிவனின்]] தொடக்கக் கருத்துருவாக இருக்கக்கூடும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்து.
 
[[பகுப்பு: சிந்துவெளி நாகரிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_முத்திரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது