பிரம்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 30:
[[ராமானுஜர்]] போற்றிய [[விசிஷ்டாத்வைதம் |விசிஷ்டாத்வைத]] வேதாந்தத்தின் முடிவு இதிலிருந்து சிறிது வேறுபடுகிறது. ஒரு வெட்டவெளியை சிறியதாகவும் மற்றொன்றை பெரியதாகவும் பிரித்துக்காட்டும் குடத்தை இல்லை என்று மறுக்கமுடியாது. ஆதலால் ஆன்மாவை பரம்பொருளின் (அ-து பிரம்மத்தின்) ஒர் அம்சம் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறது அந்த சித்தாந்தம்.
 
பிரம்மத்திற்கு ஒரு செய்கையோ மாறுதலோ கிடையாது. அது ஏதோ செய்வதுபோல் தோன்றினால் அப்பொழுது அதை ‘பரமாத்மா’ என்கிறோம். [[குருக்ஷேத்திரத்]]தில் [[பகவத் கீதை |கீதை]]யைப்பேசும் பரமாத்மாவை [[கிருஷ்ணபரமாத்மா]] வென்றும், [[கைலாய]]த்தில் செயல்படும்போது அதை [[பரமேசுவரன்]] என்றும், [[வைகுண்ட]]த்தில் செயல்படும்போது அதை [[ஸ்ரீமந்நாராயணன்]] என்றும் [[ஸத்யலோக]]த்தில் படைத்தல் தொழிலில் ஈடுபடும்போது பிரமன் என்றும் சொல்கிறோம். இவர்களெல்லாம் ஒரே பரம்பொருளின் வெளிப்பாடுகள். இவ்விதம் பரமாத்ம தத்துவத்தை (பரம்பொருளை) முதலில் சொல்லி அதனுடைய வெளிப்பாடுதான் பரமாத்மாவென்று பின்னால் சொல்வது அத்வைத வேதாந்தக் கொள்கை. மாறாக, பரமாத்மாவை அடிப்படையாக வைத்து அவருடைய தத்துவம் தான் பரமாத்ம தத்துவம் என்று சொல்வது விசிஷ்டாத்வைத வேதாந்தக் கொள்கை.
 
பிரம்மம் குணங்களற்றது (‘[[நிர்க்குணம்]]’) என்று அத்வைதம் சொல்கிறது. விசிஷ்டாத்வைதம் இதை மறுக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது