"இடலை எண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9,831 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி
சி (சேர்க்கை)
===சமையலுக்கான பாவனை===
{{Vegetable oils, composition}}
 
==சமய மரபுகளில் ஆலிவ் எண்ணெய்ப் பயன்பாடு==
சமையலுக்கும், உடல் நலம் பேணுவதற்கும், அழகு ஒப்பனைக்கும் பயன்பட்ட ஆலிவ் எண்ணெய் பண்டைக்காலத்திலிருந்தே சமய மரபுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
'''யூத சமயம்:'''
 
ஆலிவ் பழத்திலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டதைப் பதிவு செய்துள்ள முதல் ஏடு விவிலியம் ஆகும். இசுரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலையடைந்து, வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிப் பயணம் செய்த காலத்தில், அதாவது கி.மு. 13ஆம் நூற்றாண்டில், இவ்வாறு ஆலிவ் எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டது.
<blockquote>"விளக்குக்காகப் பிழிந்த தூய்மையான ஒலிவ எண்ணெய் கொண்டுவரப்பட வேண்டுமென்று இசுரயேல் மக்களுக்கு நீ கட்டளையிடுவாய். சந்திப்புக் கூடாரத்தில், உடன்படிக்கைப் பேழைக்கு முன்னுள்ள தொங்குதிரைக்கு வெளியே, அணையாவிளக்கு எரிந்துகொண்டிருக்கட்டும்." (விடுதலைப் பயணம் 28:20-21)</blockquote>
 
[[Image:Olive Press in Pompeji.JPG|thumb|left|ஆலிவ் பழத்திலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் கருவி. இடம்: பொம்பேயி நகர், இத்தாலி. காலம்: கி.பி. 79).]]
 
எருசலேம் கோவிலிலும் திருவிளக்குகளுக்கான எரிபொருளாக ஆலிவ் எண்ணெய் பயன்பட்டது. "தூய்மையான ஒலிவ எண்ணெய்" என்பது கனிந்த ஒலிவப் பழங்களைப் பிழிந்து நேரடியாகப் பெறப்பெட்ட எண்ணெயைக் குறிக்கும். இத்தகைய "தூய்மையான" எண்ணெய்தான் கோவிலில் பயன்படுத்தப்பட்டது. அந்த எண்ணெய் பெரிய கலங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டது.
 
விவிலியக் காலத்தில் நடந்ததுபோல, இன்றும் யூதர்கள் ஹனுக்கா விழாக் கொண்டாட்டத்தின்போது ஒலிவ எண்ணெய்க் கலனை நினைவுகூர்கின்றனர்.
 
இசுரயேலின் அரசருக்குத் திருப்பொழிவு அளிப்பதற்கு ஒலிவ எண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
<blockquote>"சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து தாவீதின் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்றுமுதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது." (1 சாமுவேல் 16:13)</blockquote>
 
'''கிறித்தவம்:'''
 
கிறித்தவ சபைகளுள் குறிப்பாக கத்தோலிக்க சபையும் மரபுவழித் திருச்சபையும் அருட்சாதனங்களை வழங்குவதில் ஒலிவ எண்ணெயைப் பயன்படுத்துகின்றன. திருமுழுக்குப் பெறுவோரைத் தயாரிக்கும் சடங்கில் "புகுமுகச் சடங்கு" எண்ணெய், திருமுழுக்கு வழங்கியபின் "பரிமள எண்ணெய்" ஒலிவ எண்ணெய் ஆகும்.
 
உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும்போது பயன்படும் எண்ணெயும் ஒலிவ எண்ணெய்தான். அதுபோலவே, குருப்பட்ட அருட்சாதனம், மற்றும் நோயில் பூசுதல் என்னும் அருட்சாதனம் வழங்குவதற்கும் ஒலிவ எண்ணெய் பயன்டுகிறது.
 
அருட்சாதனங்கள் தவிர, அருட்கருவிகளாகக் கருதப்படும் சில சமயச் சடங்குகளிலும் ஒலிவ எண்ணெய் பயன்படுகிறது. கோவிலையும் கோவில் பீடத்தையும் அர்ச்சிக்கும் சடங்குக்கு ஒலிவ எண்ணெய் பயன்படுகிறது.
 
மரபுவழித் திருச்சபைகளில் கோவில் விளக்குகளை எரிக்க ஒலிவ எண்ணெய் பயன்படுகிறது. அதுபோலவே வீட்டில் இறைவேண்டல் செய்யும்போதும், கல்லறையில் செபம் நிகழ்த்தும்போதும் ஒலிவ எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். தவக் காலத்தின்போது ஒலிவ எண்ணெய் சமையலில் பயன்படுத்தாமல் விரதம் மேற்கொள்கின்றனர். திருவிழாக்களும் ஞாயிறு கொண்டாட்டமும் இவ்விரதத்திற்கு விதிவிலக்குகள்.
 
'''இசுலாம்:'''
 
திருக்குரான் ஒலிவம் (சைத்தூன்) பற்றி உயர்வாகப் பேசுகிறது:<ref>[http://www.tamililquran.com/qurandisp.php?start=24#24: ஆலிவ் பற்றி திருக்குரான்]</ref>
<blockquote>அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன். (24:35)</blockquote>
 
மேலும், அதில் கூறப்படுவது:
<blockquote>அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
“ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.(95:1-4)</blockquote>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1307663" இருந்து மீள்விக்கப்பட்டது