விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் 100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
100 பயனர்கள். 100 தொகுப்புகள். 100 வாரங்கள்.
 
பங்கேற்பைக் கூட்டுவதற்கான சில வழிகள்:
வரிசை 11:
==இயலுமா?==
 
இது வரை ஆகக் கூடுதலாக ஒரே மாதத்தில் 24 முனைப்பான பங்களிப்பாளர்களைப் பெற்றுள்ளோம். 1000 கட்டுரைகளைத் தாண்டிய விக்கிப்பீடியாக்களின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கருதும் போது, தமிழ் விக்கிப்பீடியா [http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm 37ஆவது இடத்தில்] உள்ளது.

மார்ச்சு 2010ல் 7 ஆக இருந்த எண்ணிக்கை, மார்ச்சு 2011ல் 20ஆக உயர்ந்தது. இது கிட்டத்தட்ட 200%க்கும் மிஞ்சிய வளர்ச்சி. நாம் அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு 100% வளர்ச்சியையை எட்டினாலே 100 முனைப்பான பங்களிப்பாளர்கள் என்ற குறிக்கோளை எட்டலாம். (2013 இலக்கு: 24*2 = 48; 2014 இலக்கு: 48*2=96)
 
உலக விக்கிப்பீடியாக்களை எடுத்துக் கொண்டால், [http://stats.wikimedia.org/EN/TablesWikipediansEditsGt100.htm 14 விக்கிப்பீடியாக்கள் மட்டுமே ஒவ்வொரு மாதமும் 100 முனைப்பான பங்களிப்பாளர்கள்] என்ற இலக்கைத் தாண்டியுள்ளார்கள். நாம் மக்கள் தொகை அடிப்படையில் மொழிகள் பட்டியலில் முதல் 20 இடத்தில் இருக்கிறோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.!
வரி 18 ⟶ 20:
இதற்கு இரண்டு அணுகுமுறைகளை மேற்கொள்ளலாம். சிறப்பாக ஏதும் செய்யாமலேயே தற்போது உள்ள நடவடிக்கைகளையே தொடர்வது. பக்கப் பார்வைகள் கூடக் கூட பங்களிப்பாளர்களும் எப்படியாவது தாமாகவே கூடுவர் என்று எதிர்நோக்குவது. ஆனால், இது அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஏனெனில், ஒவ்வொரு மாதமும் 60 இலட்சம் பக்கப் பார்வைகள் கிடைத்தாலும் ஆகக் கூடுதலாக 24 பேர் தான் முனைப்பான பங்களிப்பாளர்களாக உள்ளனர். இன்னும் 76 பேரைப் பெற இன்னும் எத்தனை இலட்சம் பார்வைகள் தேவை? :) இதே வேறு நோக்கில், ஒவ்வொரு கோடித் தமிழர்களின் சார்பாக 3.6 பேர் மட்டுமே முனைப்பான பங்களிப்பாளர்களாக உள்ளோம். இன்னும் 76 பேரைப் பெற இன்னும் எத்தனைக் கோடித் தமிழர்கள் தேவை?
 
ஆகவே, பெறுகிற ஒவ்வொரு இலட்சம் பக்கப் பார்வைக்கும் இன்னும் கூடுதலான பங்களிப்பாளர்களைப் பெறுவது எப்படி என்று சிந்திக்கசிந்திப்பதே வேண்டும்.திறன் வாய்ந்த வழி
 
குறிப்பு: [http://shijualex.wordpress.com/2013/01/27/analysis-of-the-indic-language-statistical-report-2012/ மலையாள விக்கிப்பீடியர்கள் நம்மை விட இரு மடங்கு பங்களிப்பாளர்களை ஈர்க்க வல்லவர்களாக இருக்கிறார்கள்.]
 
பங்கேற்பைக் கூட்டுவதற்கான சில வழிகள்:
(விரியும்...)
 
* [[விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள்|தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்கள்]] போன்ற முயற்சிகள்
* பங்களிப்புகளைத் தூண்டுவதற்கான சிறப்பான [http://en.wikipedia.org/wiki/Landing_page வருகைப் பக்க] வடிவமைப்பு
* புதுப்பயனர்களுக்கான இன்னும் சிறப்பான வழிகாட்டல், தொடர் ஒத்தாசை, உதவிப் பக்கங்கள்.
* பங்களிப்பு மைல்கற்களைப் பற்றிய நினைவூட்டல்கள், பதக்கங்கள்
* கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி போன்ற முயற்சிகள்
* தொடர் ஊடக அறிமுகங்கள்
* சமூக வலைத்தளங்கள் உள்ளிடவற்றில் திட்டமிட்ட பரப்புரை அணுகுமுறை.
 
(விரியும்...)
 
==பங்கேற்கும் பயனர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:விக்கித்_திட்டம்_100" இலிருந்து மீள்விக்கப்பட்டது