தொலைக்காட்சிப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 4:
 
தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக [[புவிப்புறத் தொலைக்காட்சி|ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி]]களுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய [[கம்பிவடத் தொலைக்காட்சி|கம்பிவடம்]] மற்றும் [[செய்மதித் தொலைக்காட்சி|செய்மதித் தொலைக்காட்சிகளையும்]] எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒளிதங்களையும் காணலாம்.
==தொலைக்காட்சிப் பெட்டியின் முதன்மை அங்கங்கள்==
* [[இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி]] (டியூனர்)
* மின்காந்த அதிர்வெண் மிகைப்பி (ஆர்.எஃப். ஆம்பிளிபையர்)
* கலவைக்கருவி (மிக்சர்)
* இடைநிலை அதிர்வெண் மிகைப்பி (ஐ.எஃப் ஆம்பிளிபையர்)
* ஒளிதப் பிரிவு (வீடியோ செக்சன்)
* ஒலிதப் பிரிவு (ஆடியோ செக்சன்)
* படக்குழல் (பிக்சர் டியூப்)
* மின்திறன் அளிப்பு (பவர் சப்ளை)
===இசைவித்த மின்காந்த அலைவெண் வாங்கி===
தொலைக்காட்சி அலைவாங்கியிலிருந்து பல்வேறு அலைவரிசைகளும் பெறப்படுகின்றன. விரும்பிய அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும்
வண்ணம் அலைவெண் வாங்கி விரும்பிய அலைவரிசையுடன் இசைந்து அதனை மட்டும் வெளிப்படுத்தும். இதன் வெளியே வேண்டாத அலைவரிசைகள் வடிகட்டப்படுகின்றன. துவக்கத்தில் தனியான மின்னணு பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன; தற்காலத்தில் எண்ணிம வடிவத்தில் வடிகட்டப்படுவதால் நெருங்கி அமைந்த அலைவரிசைகளையும் வடிகட்ட முடிகிறது. மேலும் இசைவிப்பதும் மிக எளிதாக அமைந்துள்ளது.
===மின்காந்த அதிர்வெண் மிகைப்பு===
விரும்பி வடிகட்டப்பட்ட அலைவரிசை வெகுதொலைவு பயணித்திருப்பதால் ஆற்றல் குறைந்திருக்கலாம். எனவே இதன் ஆற்றலைக் கூட்டுவதற்கு மின்காந்த அதிர்வெண் மிகைப்பி பயன்படுகிறது. அடுத்த நிலை கலவைக்கருவியில் [[மின் இரைச்சல்]] கூட்டப்படக் கூடுமாகையால் வேண்டிய குறிப்பலை ஏற்றிய அலவரிசையின் ஆற்றலைக் கூட்டுவது இன்றியமையாகிறது.
===கலவைக்கருவி===
ஆற்றல் கூட்டிய மின்காந்த அலைவரிசையை இடைநிலை அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகள் ஏற்றப்பட்ட இடைநிலை அதிர்வெண் அலைகள் கலவைக்கருவியில் பெறப்படுகின்றன. இதனால் எந்த அலைவரிசையில் ஏற்றப்பட்டிருந்தாலும் ஒரே அதிர்வெண் அலைக்கு தொலைக்காட்சி குறிப்பலைகள் மாற்றப்படுகின்றன.
===இடைநிலை அதிர்வெண் மிகைப்பி===
கலவைக்கருவியிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளின் ஆற்றலைக் கூட்டுவதற்காக இந்த மிகைப்பி பயன்படுகிறது.
===ஒளிதப் பிரிவு===
ஒருமை வண்ணத் தொலைக்காட்சி (கருப்பு/வெள்ளை) பெட்டியில் ஒளிர்மை, உறழ்பொருவு, கிடைமட்ட ஒருங்கிணைவு, நெடுமட்ட ஒருங்கிணைவு போன்ற உட்பிரிவுகள் உள்ளன. இடைநிலை அதிர்வெண் அலைவரிசையினின்றும் பிரிக்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிக் குறிப்பலைகள் இங்கு முறைப்படுத்தப்படுகின்றன. வேண்டிய மிகைப்பும் அளிக்கப்பட்டு படக்குழலில் காட்டக்கூடிய வடிவத்திற்கு மாற்றப்படுகின்றன.
 
வண்ணத் தொலைக்காட்சிகளில் கூடுதலாக நிறப்பொலிவு குறிப்பலைகள் பெறப்பட்டு மூன்று ஆதார வண்ண குறிப்பலைகளாக படக்குழலுக்கு அனுப்பப்படுகின்றன.
 
===ஒலிதப் பிரிவு===
 
===மின்திறன் அளிப்பு===
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்காட்சிப்_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது