"இசுருமுனிய" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
6ம் நூற்றாண்டுக் குப்தர் பாணியில் இச் சிற்பம் அமைந்ததுள்ளது. காதலனின் மடியில் அமர்ந்திருக்கும் காதலி எச்சரிக்கை செய்யயும் பாங்கில் ஒரு விரலை உயர்த்திக் காட்டுகிறாள். இது நாணத்தினால் காதலனைத் தடுப்பதற்கான ஒரு சைகையாக இருக்கலாம். இதில் உள்ளவர்கள் துட்டகைமுனுவின் மகனான சாஅலிய என்பவனும், அவனது தாழ்ந்த சாதிக் காதலியான அசோகமாலா என்பவளும் எனக் கருதப்படுகிறது. அசோகமாலாவுக்காக சாலிய தனது அரசுரிமையைத் துறந்தான்.
 
இச்சிற்பம் முன்னர் இருந்ததாகக் கருதப்படும் இடத்தில் ஒரு பாளி மொழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இதில் "''சித்த மஹாயஹாமஹாயஹ குனி - மஹா (லா) கா அசல யஹாயஹ (டி) னி''" என்னும் வரி உள்ளது. "மஹாயா எனப்படும் இந்தக் குகை வணக்கத்துக்குரிய அசலயவுக்கு வழங்கப்பட்டது" என்பது இதன் பொருள். இதன்படி இந்த இடம் மகாசங்கத்தினருக்கு வழங்கப்பட்ட பின்னர் காதலர் சிற்பம் தற்போது இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிகிறது. சிற்பத்தில் உள்ளவர்கள் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] வரும் மன்னன் குவேரா [[வைசுராவணன்|வைசுராவணனும்]], அவனது அரசி குனியும் என்ற கருத்தும் உள்ளது. இம்மன்னன் இராவணனுக்கு முன்னர் லங்காபுரவில் இருந்து இலங்கையை ஆண்டதாக இராமாயணம் கூறுகிறது.
 
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியற் களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1313345" இருந்து மீள்விக்கப்பட்டது