விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
''விக்கிப்பீடியாவைத் தொகுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?''
No edit summary
வரிசை 1:
எங்கேயோ பின்வரும் வசனத்தை விக்கியின் நிர்வாகி ஒருவர் வாயிலாக கேட்டதாக நினைவு. அது யாதெனில் "'''விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்துநிறைய பேர் எழுத்தாளர்கலாக மாறியிருக்கிறார்கள்.'''" அந்த எழுத்தாளர்கள் தமிழ் தொடர்பானவர்கள் என்றால் அவ்ர்களின் பட்டியலை இட்டு நீங்களும் விக்கியை தொகுப்பதன் மூலம் எழுத்தாளராக ஆகலாம் என்று தள அறிவிப்பு இட்டால் என்ன?--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 16:21, 2 பெப்ரவரி 2013 (UTC)
 
:மேற்கண்ட கூற்றை யார் என்ன சூழலில் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆயினும், ஒருவர் எழுத்தாளராக மாறுவதற்குப் பல்வேறு காரணிகள் உண்டு என்பதால், விக்கிப்பீடியாவின் காரணமாக ஒருவர் எழுத்தாளர் ஆனார் எனச் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை. அப்படி யாராவது வெளிப்படையாகச் சொன்னால் பார்க்கலாம் :) ஆனால், நீங்கள் இன்னொரு முக்கியமான கருத்தைத் தொட்டிருக்கிறீர்கள். ''விக்கிப்பீடியாவைத் தொகுப்பதால் எனக்கு என்ன கிடைக்கிறது?'' என்பது பலரின் மனதில் தோன்றக்கூடிய கேள்வி. இதற்கான பதிலை நாம் அனைவரும் சிந்தித்து வரிசைப்படுத்தினோமானால், அதனை முன்னிறுத்தித் தூண்டல்கள் இடலாம். எடுத்துக்காட்டுக்கு,
 
வரி 8 ⟶ 9:
 
..என்று இப்படி பல பயன்களைச் சொல்லலாம்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:27, 2 பெப்ரவரி 2013 (UTC)
 
நான் குறிப்பிட்டதோ இன்னொருவர் குறிப்பிட்டதோ தமிழ் விக்கியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த விக்கிகளையும் சேர்த்துச் சொன்னதாக ஞாபகம். உங்களுக்கு தெரிந்து யாரேனும் விக்கி வந்த பிறகு எழுத்தாளர் ஆகியுள்ளனரா? என்னை பொறுத்தவரை வரலாற்று கட்டுரைகளுக்கு எல்லாம் முறைப்படி மேற்கோள் வழங்குதலை எல்லாம் இங்கு தான் கற்றுக்கொண்டேன். விக்கிக்கு வருவதற்கு முன் கட்டுரை எழுத எல்லாம் தெரியாது. நூலகம் சென்று படிப்பதோடு சரி. ஆய்வுக்கட்டுரை எல்லாம் அனுப்ப அழைப்பு வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 11:47, 4 பெப்ரவரி 2013 (UTC)
Return to the project page "விக்கித் திட்டம் 100".