பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்''' இலக்கிய, தொல்லியல், கல்வெட்டு, நாணய ஆய்வியல் மூலம் அறியப்படுகின்றது. இவற்றில் [[சங்க இலக்கியம்]] மிக முக்கியமானதாகும். இது கி.மு. பிற்கால இறுதி நூற்றாண்டு காலம் தொடக்கம் கி.பி ஆரம்ப காலப் பகுதிக்குரியதாகும். சங்க இலக்கிய செய்யுள்கள் [[தமிழகம்|பண்டைய தமிழகச்]] சமூகம் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் வேறுபட்ட பகுதிகளை வருணணை விளக்கமாக கொண்டுள்ளது. இவற்றின் பல பகுதிகளை ஆய்வாளர்கள் நம்பகமான விபரங்கள் என ஏற்றுக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட [[அனோ டொமினி|கிறித்தவ கால]] வளர்ச்சி ஏற்பட்ட காலப்பகுதி கிரேக்க உரோம இலக்கியங்கள் தமிழகத்திற்கும் [[உரோமைப் பேரரசு]]க்கும் இடையிலான கடல் வாணிபம் பற்றிய, தமிழ் நாட்டின் கரையோர பல துறைமுகங்களின் பெயர்கள் மற்றும் இடங்கள் உட்பட்ட விபரங்களைத் தருகின்றன.
 
[[தமிழ்நாடு]] மற்றும் [[கேரளம்|கேரளத்தில்]] மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளாய்வு அகழ்வுகள் சங்க கால எச்சங்களான பல்வகை மட்பாண்டங்கள், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், தருவிக்கப்பட்ட மட்பாண்ட பொருட்கள், தொழிற்சாலைப் பொருட்கள், செங்கல் கட்டமைப்புக்கள், சுற்றும் திருகுச்சுருள் ஆகியவற்றை வெளிப்படுத்தியது. [[பாறைப்படிவியல்]], பண்டையெழுத்துமுறை நுட்பங்கள் போன்றவை சங்ககால அப்பொருட்களின் காலத்தைக் கணிக்க உதவியது. அகழ்ந்தெடுக்கப்பட்ட செயற்கைப் பொருட்கள் சங்க இலக்கியம் குறிப்பிடும் வேறுபட்ட பொருளாதார செயற்பாடுகளான விவசாயம், நெசவு, கொல்லர் வேலை, இரத்தினக் கற்கள் பட்டை தீட்டல், கட்டட கட்டுமானம், முத்து அகழ்வு, ஓவியம் ஆகியவற்றின் இருத்தலுக்கான சான்றை வழங்குகின்றது.
 
குகைகளிலும் மட்பாண்டங்களிலும் காணப்பட்ட எழுத்துப் பொறிப்புக்கள் தமிழக வரலாறு பற்றி கற்றுக் கொள்வதற்கான இன்னுமொரு மூலமாகும். கேரளம், தமிழ்நாடு, இலங்கை மற்றும் எகிப்து, தாய்லாந்து ஆகிய இடங்கள் பலவற்றில் [[தமிழ்ப் பிராமி]]யிலான எழுத்துக்கள் காண்டுபிடிக்கப்பட்டன.<ref>{{cite news| url=http://www.thehindu.com/opinion/op-ed/article482654.ece | location=Chennai, India | work=The Hindu | first=Iravatham | last=Mahadevan | title=An epigraphic perspective on the antiquity of Tamil | date=2010-06-24}}</ref> இவற்றில் அதிகமானவை அரசர்களாலும் மக்கள் தலைவர்கள் அல்லது தளபதிகளாலும் உருவாக்க அனுமதிக்கப்பட்டிருந்தன. சங்க சமூகத்தினாலும் ஏனைய விடயங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இக்கால தமிழ் அரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்கள் அவர்களின் அரசின் நகர் மத்தி மற்றும் ஆற்றுப்படுக்கையிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டன. பல நாணயங்கள் அவற்றின் பின்புறத்தில் அரச சின்னத்தைக் கொண்டிருந்தன. [[சேரர்]] அம்பும் வில்லும் போன்றன குறிப்பிடத்தக்கன. சில உருவப்படத்தையும் எழுத்துப் பொறிப்பையும் கொண்டிருந்ததன் மூலம் நாணய ஆய்வியலாளர்கள் அதன் காலத்தைக் கண்டுபிடிக்க உதவின.
 
==குறிப்புக்கள்==
{{reflist|2}}
 
[[பகுப்பு:தமிழ் தொன்மவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைய_தமிழ்_வரலாற்று_மூலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது