இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து, வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயச் செல்வாக்கினாலும், சிறீவசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது. 8ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மாதரம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளமைக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் [[போரோபுதூர்|போரோபுதூரையும்]], மாதரம் வம்சத்தின் [[பிராம்பனான்|பிராம்பனானையும்]] அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான [[மாசாபாகித்]] கிழக்கு சாவாவில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜ மதா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.
 
இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில், வடக்கு [[சுமாத்திரா]]வில் இருந்துதே இந்தோனேசியாவில் [[இசுலாம்|இசுலாமைத்]] தழுவிய மக்கள் வாழ்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன. பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இசுலாமை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சுமாத்திராவிலும், சாவாவிலும் இசுலாமே முதன்மை மதமாக விளங்கியது. பெரும்பாலும், இசுலாம் இப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவாவில், கைக்கொள்ளப்படும் இசுலாமின் வடிவம் உருவாகக் காரணம் ஆகியது. 1512 ஆம் ஆண்டில் [[போத்துக்கேயர்|போத்துக்கேய]] வணிகர்கள் [[பிரான்சிசுக்கோ செராவோ]] தலைமையில், [[மலுக்கு]] பகுதியில், [[சாதிக்காய்]], [[கராம்பு]], [[வால்மிளகு]] போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே, இந்தோனேசிய மக்களுக்கு [[ஐரோப்பியர்|ஐரோப்பியருடனான]] முறையான தொடர்பு ஏற்பட்டது. போத்துக்கேயரைத் தொடர்ந்து, ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602ல், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு, டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.
 
== காட்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது