போர்த்துகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 77:
'''போர்த்துகல்''' ({{lang-pt|Portugal}}), என்றழைக்கப்படும் '''போர்த்துகல் குடியரசு''' (''Portuguese Republic'', {{lang-pt|República Portuguesa}}) [[ஐரோப்பா]]க் கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் [[ஐபீரியத் தீவக்குறை]]யில் உள்ள ஒரு நாடு ஆகும். கண்ட ஐரோப்பாவின் மேற்குக் கோடியில் அமைந்த நாடும் இதுவே. இதன் வடக்கிலும் கிழக்கிலும் [[ஸ்பெயின்]] நாடும் மேற்கிலும் தெற்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] உள்ளன. கண்டப் போத்துக்கல் தவிர, அத்திலாந்திக் தீவுக்கூட்டங்களான அசோரெசு, மதேரியா என்பனவும் போர்த்துகலின் இறைமைக்குள் அடங்கும் பகுதிகள் ஆகும். இவை போர்த்துகலின் தன்னாட்சிப் பகுதிகள். போர்த்துகல் என்னும் பெயர், ''போர்ட்டசு கேல்'' என்னும் இலத்தீன் பெயர் கொண்ட அதன் இரண்டாவது பெரிய நகரான ''போர்ட்டோ'' என்பதில் இருந்து பெறப்பட்டது.<ref>{{cite web |url=http://www.instituto-camoes.pt/CVC/bdc/etnologia/opusculos/vol05/opusculos05_28_38.pdf |title=Leite de Vasconcelos, José. ''Cale e Portucale''. Opúsculos Vol. V&nbsp;– Etnologia (Parte I) Lisboa, Imprensa Nacional, 1938 |language=Portuguese}}</ref> [[லிஸ்பன்]] போர்த்துகலின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அலுவல் மொழி [[போர்த்துக்கீச மொழி]] ஆகும்.
 
தர்போதைய போர்த்துகல் குடியரசின் எல்லைகளுக்குள் அடங்கிய நிலப்பகுதிகள் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தொடர்ச்சியாகக் குடியேற்றங்களைக் கொண்டதாக இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம் உரோமரும், [[விசிகோதியர்]], [[சுவேபியர்]] ஆகியோரும் ஆட்சி செய்த பின்னர், 8 ஆம் நூற்றாண்டில் [[ஐபீரியத் தீவக்குறை]] முழுவதையும் இசுலாமியரான மூர்கள் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர். கிறித்தவ மீட்பின்போது, 1139 ஆம் ஆண்டில், போர்த்துகல் கலீசியாவில் இருந்து பிரிந்து தனியான இராச்சியம் ஆனது. இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப் பழைய தேச அரசு என்ற பெருமையையும் பெற்றது.<ref>Brian Jenkins, Spyros A. Sofos, [http://books.google.com/books?id=LNRyNG9NNkcC&lpg=1 "Nation and identity in contemporary Europe"], p. 145, Routledge, 1996, ISBN 0-415-12313-5</ref> 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளில், கண்டுபிடிப்புக் காலத்தின் முன்னோடியாக விளங்கியதன் விளைவாக, போர்த்துகல் மேற்கத்திய செல்வாக்கை விரிவாக்கி முதல் [[போர்த்துகல் பேரரசு|உலகப் பேரரசை]] நிறுவியதுடன்,<ref>Melvin Eugene Page, Penny M. Sonnenburg, p. 481</ref> உலகின் முக்கியமான பொருளாதார, அரசியல், படைத்துறை வல்லரசுகளில் ஒன்றாகவும் ஆனது. அத்துடன், நவீன ஐரோப்பிய குடியேற்றவாதப் பேரரசுகளுள் மிகக் கூடிய காலமான ஏறத்தாழ 600 ஆண்டுகள் நிலைத்திருந்தது போர்த்துக்கேயப் பேரரசே. இது 1415ல் [[செயுட்டா]]வைக் கைப்பற்றியதில் இருந்து 1999ல் [[மாக்கூ]]வுக்கும் 2002ல் கிழக்குத் திமோருக்கும் விடுதலை அளிக்கும்வரை நீடித்து இருந்தது. இந்தப் பேரரசு, உலகம் முழுவதும் இன்று 53 நாடுகளை உள்ளடக்கியிருக்கும் பரந்த பகுதியில் பரவி இருந்தது. எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது.
 
போர்த்துகல் மிகவும் கூடிய [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]]ணுடன் கூடிய வளர்ச்சியடைந்த ஒரு நாடு. வாழ்க்கைத் தரச் சுட்டெண் அடிப்படையில் உலகில் 19 ஆவது இடத்திலும் (2005), பூமராங்கின் உலகப் புதுமைகாண் சுட்டெண் அடிப்படையில் 25 ஆவது இடத்திலும் உள்ளது.<ref>http://www.bloomberg.com/slideshow/2013-02-01/50-most-innovative-countries.html#slide27</ref> இது உலகில் கூடிய அளவு உலகமயமான நாடுகளில் ஒன்றும், அமைதியான நாடுகளின் ஒன்றும் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதுடன், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, நாட்டோ, போத்துக்கேய மொழி நாடுகள் சமூகம், யூரோசோன், செங்கன் ஒப்பந்தம் ஆகியவற்றின் தொடக்க உறுப்பு நாடாகவும் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது