பொம்மிரெட்டி நாகிரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
குழந்தைகளுக்காக தெலுங்கில் 'சந்தமாமா' என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இது பின்னர் 'அம்புலிமாமா' என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. அது வெற்றியடையவே, பல்வேறு மொழிகளிலும் வெளியாயிற்று. ஆந்திராவைச் சேர்ந்த சக்ரபாணி என்ற எழுத்தாளர். அம்புலிமாமா இதழில் கதை எழுதி வந்தார். அப்போது நாகிரெட்டியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். சினிமாத்துறையில் ஈடுபட விரும்பி, வடபழனி அருகே நிலம் வாங்கி, வாகினி ஸ்டூடியோவைத் தொடங்கினார்கள்.
 
== திரைப்பரத்திரைப்படத் தயாரிப்பாளர் ==
இங்கு தயாரான படங்கள் வெற்றிகரமாக ஓடின. நாகிரெட்டியின் மகள் பெயர் விஜயா. அவர் பெயரால் 'விஜயா புரொடக்ஷன்ஸ்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நாகிரெட்டியும், சக்ரபாணியும் தொடங்கி, 'பாதாள பைரவி' என்ற படத்தைத் தயாரித்தனர். [[என். டி. ராமராவ்]], கே.மாலதி, கிரிஜா, [[எஸ். வி. ரங்காராவ்]] ஆகியோர் நடித்த இந்தப்படம், தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் தயாராகியது. தமிழ்ப்படத்துக்கான வசனத்தையும், பாடல்களையும் [[தஞ்சை ராமையாதாஸ்]] எழுதினார்.
 
வரிசை 24:
 
ஆனால், நாகிரெட்டி மறுத்துவிட்டார். 'தமிழ் மண்தான் என்னை வாழவைத்தது. கடைசி மூச்சு உள்ளவரை தமிழ்நாட்டில்தான் வாழ்வேன்' என்று கூறிவிட்டார். திரைப்படத் தயாரிப்பு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பட அதிபர்கள் வெளிப்புறக் காட்சிகளை அதிகம் படமாக்கத்தொடங்கவே, ஸ்டூடியோக்களில் வேலை குறைந்தது. இதனால் ஸ்டூடியோக்களை நடத்த முடியாமல், ஒவ்வொரு ஸ்டூடியோவாக மூடப்பட்டு வந்தன. நாகிரெட்டி, தன் ஸ்டூடியோவை மக்களுக்கு பயனுள்ள முறையில் மாற்ற விரும்பினார்.
 
== இறுதிக்காலம் ==
ஸ்டூடியோ இருந்த இடங்களில் விஜயா ஆஸ்பத்திரி, விஜய சேஷ மகால் திருமண மண்டபம் ஆகியவற்றை கட்டினார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர், இந்திய திரைப்படக் கழக தலைவர் போன்ற பதவிகளை பல முறை வகித்தவர் நாகிரெட்டி. 2 பல்கலைக்கழகங்கள் நாகி ரெட்டிக்கு டாக்டர் பட்டம் வழங்கின. சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் நாகிரெட்டி பாதிக்கப்பட்டார். நினைவாற்றலை இழந்தார். 24-2-2004 அன்று சென்னையில் நாகிரெட்டி மரணம் அடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பொம்மிரெட்டி_நாகிரெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது