"கிருஷ்ணதேவராயன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (MerlIwBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
கிருஷ்ணதேவராயனின் தந்தையான [[துளுவ நரச நாயக்கன்]], பேரரசன் [[சாளுவ நரசிம்ம தேவ ராயன்|சாளுவ நரசிம்ம தேவ ராயனிடம்]] தளபதியாக இருந்தவன். நரசிம்ம தேவ ராயன் இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மகனும் கொல்லப்பட்டான். சிறுவனாயிருந்த இன்னொரு மகனை அரசனாக்கி, பேரரசு சிதைந்துவிடாமலிருக்க அதன் நிர்வாகப் பொறுப்பைத் தன்கையில் எடுத்துக் கொண்டான் நரச நாயக்கன். ஆனால், நரச நாயக்கனுக்குப் பின் நிர்வாகப் பதவியை ஏற்றுக்கொண்ட அவனது மூத்த மகனும், கிருஷ்ணதேவராயனின் தமையனுமான [[வீரநரசிம்ம ராயன்]] சில காலத்தின் பின் தானே பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். கிருஷ்ணதேவராயன் அவனுக்கு நிர்வாகத்தில் உதவியாக இருந்தான். வீரநரசிம்ம ராயன் இறந்த பின் கிருஷ்ணதேவராயனுக்குப் பேரரச பதவி கிட்டியது. கிருஷ்ணதேவராயனின் முடிசூட்டுவிழா கிருஷ்ணனின் பிறந்தநாளில் நடைபெற்றது. திறமை வாய்ந்த முதன் மந்திரியாகிய [[திம்மராசன்]], கிருஷ்ணதேவராயனுக்குப் பேரரசின் நிர்வாகத்தில் பெரும் உதவியாக இருந்தான். கிருஷ்ணதேவராயனை ஆட்சிபீடம் ஏற்றியதில் பெரும் பங்கு திம்மராசனையே சாரும். கிருஷ்ணதேவராயன் இவனை ஒரு தந்தையின் இடத்தில் மதித்து வந்தான்.
 
கிருஷ்ணதேவராயனின் மிகமுந்திய [[கல்வெட்டு]] 26 ஜூலை 1509 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவன், விஜயநகரத்துக்கு அருகில் தனது தாயின் நினைவாக அவளது பெயரால், [[நாகலபுரம்]] என்னும் புறநகர்ப் பகுதியைக் கட்டினான்.
 
==ஆளுமை==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1332079" இருந்து மீள்விக்கப்பட்டது