போர்த்துகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
 
இன்று போர்த்துகலாக இருக்கும் பகுதிகளை உரோமர் கைப்பற்றுவதற்கு ஏறத்தாழ 200 ஆண்டுகள் பிடித்ததுடன், பல இளம் போர்வீரர்களும் தமது உயிர்களை இழந்தனர். அத்துடன் கைதிகளாகப் பிடிபட்டவர்களுள் பேரரசின் பிற பகுதிகளில் விற்கப்படாதவர்கள், சுரங்கங்களில் அடிமைகளாக விரைவான சாவைத் தழுவினர். கிமு 150ல் வட பகுதியில் ஒரு கலகம் ஏற்பட்டது. லுசித்தானியரும், பிற தாயகப் பழங்குடிகளும் விரியாத்தசுவின் தலைமையில் மேற்கு ஐபீரியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.
 
உரோம், ஏராளமான படைகளையும், மிகச் சிறந்த தளபதிகளையும் கலகத்தை அடக்குவதற்காக அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. லுசித்தானியர்கள் நிலப்பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தனர். உரோமத் தலைவர்கள் தமது உத்தியை மாற்றிக்கொள்ளத் முடிவு செய்தனர். விரியாத்தசுவைக் கொல்வதற்காக அவனது கூட்டாளிகளுக்குக் கையூட்டுக் கொடுத்தனர். கிமு 139ல் விரியாத்தசு கொல்லப்பட்டான். தௌலாத்தசு என்பவன் தலைவனானான்.
 
ரோம் ஒரு குடியேற்றவாத ஆட்சியை அங்கே நிறுவியது. விசிகோத்தியக் காலத்திலேயே லுசித்தானியாவின் உரோமமயமாக்கம் முழுமை பெற்றது. கிமு 27ல் லுசித்தானியா உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது. லுசித்தானியர் தமது சுதந்திரத்தை இழந்து அடக்கப்படுபவர்கள் ஆயினர். பின்னர், கலீசியா என்று அழைக்கப்பட்ட, லுசித்தானியாவின் வடக்கு மாகாணம் உருவானது. இன்று பிராகா என்று அழைக்கப்படும் பிராக்காரா ஆகசுத்தா என்பது இதன் தலைநகரமாக இருந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது