போர்த்துகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 92:
===உரோம லுசித்தானியாவும், கலீசியாவும்===
ஐபீரியத் தீவக்குறையினுள் உரோமரின் முதல் ஆக்கிரமிப்பு கிமு 219ல் இடம்பெற்றது. 200 ஆண்டுகளுக்குள் முழுத் தீவக்குறையுமே உரோமக் குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டது. உரோமரின் எதிரிகளான கார்த்தசினியர் கரையோரக் குடியேற்றங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
[[File:Evora-RomanTemple edit.jpg|thumb|left|250px|போர்த்துகலில் உரோமர் ஆட்சியைக் குறிக்கும் லுசித்தானியாவின் அடையாளமாக [[அலென்டெசோ]]வில் இருக்கும் [[எவோரா உரோமர் கோயில்]].]]
 
இன்று போர்த்துகலாக இருக்கும் பகுதிகளை உரோமர் கைப்பற்றுவதற்கு ஏறத்தாழ 200 ஆண்டுகள் பிடித்ததுடன், பல இளம் போர்வீரர்களும் தமது உயிர்களை இழந்தனர். அத்துடன் கைதிகளாகப் பிடிபட்டவர்களுள் பேரரசின் பிற பகுதிகளில் விற்கப்படாதவர்கள், சுரங்கங்களில் அடிமைகளாக விரைவான சாவைத் தழுவினர். கிமு 150ல் வட பகுதியில் ஒரு கலகம் ஏற்பட்டது. லுசித்தானியரும், பிற தாயகப் பழங்குடிகளும் விரியாத்தசுவின் தலைமையில் மேற்கு ஐபீரியாவைக் கைப்பற்றிக்கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது