திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

125 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
No edit summary

| '''உரோமைப் பேரரசுக் காலம் (திருச்சபையின் தொடக்க முதல் 493 வரை)'''

1)#தொடக்க காலம் (சுமார் 30 முதல் 312 வரை)

2)#[[கான்ஸ்டண்டைன்]] முதல் (312-493)
|[[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுரு]] முதல் திருத்தந்தையாகக் கருதப்படுகிறார். திருத்தூதர் நடுவே பேதுரு முதலிடம் வகித்ததுபோல, [[உரோமை]] ஆயர் பிற ஆயர் நடுவே முதலிடம் வகிக்கிறார். பேதுரு [[உரோமை]]யில் [[நற்செய்தி]] அறிவித்து, [[நீரோ]] மன்னன் காலத்தில் மறைச்சாட்சியாக உயிர்துறந்தார். தொடக்க காலத் திருத்தந்தையர் பற்றிய விவரங்கள் குறைவாகவே உள்ளன. உரோமைப் பேரரசு [[கிறித்தவம்|கிறித்தவத்தை]] எதிர்த்தது. [[எருசலேம்]], [[அந்தியோக்கியா]], [[அலெக்சாந்திரியா]] போன்ற நகரங்களில் கிறித்தவ சமூகங்கள் உருவாகி இருந்தாலும், [[உரோமை]] சபை முதன்மை வாய்ந்ததாக கிறித்தவத்தின் தொடக்கத்திலிருந்தே கருதப்பட்டது.

[[கான்ஸ்டண்டைன்]] மன்னர் கிறித்தவர்களுக்கு ஆதரவு அளித்தார். 313இல் மிலான் சாசனம் வெளியிட்டு, கிறித்தவ சமயம் பேரரசு முழுவதும் பரவ வழிசெய்தார். இலாத்தரன் குன்றில் தூய யோவான் பெருங்கோவிலையும், வத்திக்கான் குன்றில் தூய பேதுரு பெருங்கோவிலையும் [[கான்ஸ்டண்டைன்]] கட்டியெழுப்பினார். திருத்தந்தையருக்குத் திருச்சபை பெயரால் உடைமைகள் கிடைக்கலாயின.

| '''நடுக்காலம் (493-1417)'''

1)#கிழக்கு கோத்திய காலம் (493-537)

2)#பிசான்சிய காலம் (537-752)

3)#ஃபிராங்கிய காலம் (756-857)

4)#உரோமைக் குடும்பங்களின் தாக்கம் (904-1048)

5)#கீழைப் பேரரசோடு மோதல் (1048-1257)

6)#இடம்பெயர் காலம் (1257-1309)

7)#அவிஞ்ஞோன் காலம் (1309-1377)

8)#மேற்கு திருச்சபை பிளவுக் காலம் (1378-1417)
|மேற்கு உரோமைப் பேரரசு 493இல் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து கிழக்கு கோத்திய மன்னர்கள் ஆட்சியைப் பிடித்தனர். அவர்கள் திருத்தந்தையரை நியமிப்பதில் தலையிட்டனர். குறிப்பாக மன்னன் தியோடோரிக்கின் தலையீடு அதிகமாக இருந்தது. சமயக் கொள்கைகளில் குறுக்கிடாவிட்டாலும் அரசியல் பாணியில் அரசர்கள் திருச்சபைக் காரியங்களில் தலையிட்டார்கள். இதனால் ஒரே சமயத்தில் இரு திருத்தந்தையர் இருந்த நிலையும் எழுந்தது. 537இல் கிழக்கு உரோமைப் பேரரசன் ஜஸ்டீனியன் உரோமை நகரைப் பிடித்ததிலிருந்து திருத்தந்தையை நியமிப்பதில் தலையிட்டார். கிரேக்க கலாச்சாரம் மேற்கு சபையில் பரவத் தொடங்கியது. அக்காலத் திருத்தந்தையரும் கிரேக்க ஆதிக்கத்தின் கீழ் இருந்த இடங்களிலிருந்து வந்தார்கள். திருத்தந்தை முதலாம் கிரகோரி (590-604) திருத்தந்தையின் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றார். இங்கிலாந்தில் [[கிறித்தவம்]] பரவ வழிவகுத்தார்.

|'''நவீன காலத் தொடக்கமும் நவீன காலமும் (1417-இன்று வரை)'''

1)#மறுமலர்ச்சிக் காலம் (1417-1534)

2)#புராட்டஸ்டாண்டு சீர்திருத்தமும் கத்தோலிக்க சீர்திருத்தமும் (1517-1585)

3)#அலங்கார ("பரோக்கு") காலம் (1585-1689)

4)#புரட்சிக் காலம் (1775-1848)

5)#உரோமை நகர் வரையறுக் காலம் (1870-1929)

6)#வத்திக்கான் நகர் உருவான காலம் (1929)

7)#இரண்டாம் உலகப் போர்க்காலம் (1935-1945)

8)#இரண்டாம் வத்திக்கான் சங்கமும் இன்றைய காலமும் (1962-1965 முதல் இன்றுவரை

18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1337870" இருந்து மீள்விக்கப்பட்டது