தொல்லியல் பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
 
'''தொல்லியல் பதிவு''' (''Archaeological record'') என்பது, கடந்தகால மனித நடவடிக்கைகளின் எச்சங்களை உள்ளடக்கும் தொல்லியல் சான்றுகளைக் குறிக்கும். கடந்தகாலத்தைப் பகுத்தாய்ந்து மீளுருவாக்கம் செய்ய்வதற்காகத் [[தொல்லியலாளர்]] இவற்றைத் தேடிப் பதிவு செய்கின்றனர். முக்கியமாக இவை [[அகழ்வாய்வு|அகழ்வாய்வில்]] வெளிக்கொணரப்பட்ட பொருட்களாக அமைகின்றன.
 
குறிப்பிட்ட [[தொல்லியல் களம்]] ஒன்றில் உள்ள தொல்லியல் பதிவு சில வேளைகளில் [[தொல்லியல் தொடரியம்]] (archaeological sequence) என்றும் அழைக்கப்படுவது உண்டாயினும், இரண்டு சொற்களும் ஒரே பொருள் தருவன அல்ல. தொல்லியல் பதிவு என்பது முழுமையான பொருள் தருவதாக இருக்கிறது. இச்சொல்லை தொல்பொருட்களுக்கும், பிற சான்றுகளான உயிரியல் பொருட்கள் போன்றவற்றுக்கும், அவற்றுடன் இணைந்த தொடர்புகளுக்கும், [[அடுக்கியல்]] தொடர்பிலும் பயன்படுத்தலாம். ஆனால் தொல்லியல் தொடரியம் என்பதை, அடுக்கியல் ஆய்வினால் அல்லது பிற காலங்கணிக்கும் முறைகளினால் தீர்மானிக்கப்படும் காலவரிசை தொடர்பிலேயே பயன்படுத்த முடியும்.
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1372616" இருந்து மீள்விக்கப்பட்டது