ஓசனிச்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உணவு: இரட்டை நாக்கு
வரிசை 41:
== உணவு ==
ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் [[இனியம்]] (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான [[புரதம்|புரதச் சத்து]], [[அமினோக் காடிகள்]], [[உயிர்ச்சத்து]]கள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: [[செம்பருத்தி|செம்பருத்திப் பூ]], பாச்சிசுடாச்சிசு லூட்டியா (''Pachystachys lutea'') , மோனார்டா (Monarda) ஃஎலியாக்கோனியா ([Heliconia), படிலையா (Buddleia), புரோமெலியாடு (bromeliad), [[மணிவாழை]] (அல்லது கல்வாழை) (Canna), வெர்பேனா (verbena), தேன்குழல்பூ (honeysuckle), சால்வியா (salvia), பெண்ட்டா (pentas), ஃவூக்சியா (fuchsia), பலவகையான பென்ஸ்டெமோன் (penstemon) பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான [[பூந்தூள் சேர்க்கை]] ([[மகரந்த]] சேர்க்கை) நிகழ்கின்றது.
 
ஓசனிச்சிட்டுகள் தேனை எப்படி உறிஞ்சி உட்கொள்ளுகின்றன என்பது பற்றி அண்மையில்தான் கண்டறிந்தனர் (2011)[http://www.pnas.org/content/early/2011/04/27/1016944108.abstract]. இப்பறவை நீளமான தன் நாக்கைப் பூவினுள் நுழைத்து, நுண்குழாய் விளைவால் ((capillary action)
நீர்ம வடிவான தேனை உறிஞ்சுகின்றது என்று 1833 முதல் பறவையறிஞர்கள் கூறிவந்தனர். ஆனால் அப்படி இல்லை
என்று இப்பொழுது (2011 இல்) கண்டறிந்துள்ளனர். இதன் நாக்கு பிளவுடையது. இந்தப் பிளவுபட்ட இரட்டை நாக்கில் மிக மெல்லிய
இழைகள் உள்ளன. இந்த இழைகள் ஒருவாறு வளைத்து சுழற்றும் இயக்கத்தால் தேன் கவர்ந்து வருகின்றது என்று அரிந்துள்ளனர்[http://phys.org/news/2011-05-hummingbird-tongue-video.html].
 
== பறக்கும் பொழுதான [[வளிமம்|வளி]] இயக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓசனிச்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது