கனரா வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 20:
 
==வரலாறு==
வள்ளல் அம்மெம்பால் சுப்பாராவ் பாய் என்பவரால் 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் நாள் ''கனரா இந்து நிரந்தர நிதி'' என்ற பெயரில் மங்கலூரில் இந்த வங்கி பின்னர் [[1910]]-ம் ஆண்டு கனரா வங்கி லிமிடேட்(Limited)என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது. [[1958]]-ல் [[மத்தியஇந்திய ரிசர்வ் வங்கி]] [[ஹைதராபாத்|ஹைதராபாத்தைச்]] சேர்ந்த ஜி. ரகுமத்முல் வங்கியை கையகப்படுத்தச் சொல்லி கனரா வங்கிக்கு உத்தரவிட்டது. [[1870]]-ல் உருவாக்கப்பட்ட இவ்வங்கி 1925-ல் வரையரைக்குட்பட்ட நிறுவனமாக மாறியது. கையகப்படுத்தப்படும் சமயத்தில் இவ்வங்கி ஐந்து கிளைகளைக் கொண்டிருந்தது.
 
இந்திய அரசு [[1969]] ஜூலை 19 அன்று கனரா வங்கி உள்ளிட்ட 13 வர்த்தக வங்கிகளை [[தேசியமயமாக்கப்பட்ட வங்கி|தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாக]] மாற்றியது. 1976-ல் கனராவங்கி தனது 1000-வது கிளையை திறந்தது. 1985-ல் மீட்பு நடவடிக்கையில் வட இந்தியாவில் செயல்பட்டு வந்த லஷ்மி வணிக வங்கியை கையகப்படுத்தியது இதன் மூலமாக கனரா வங்கிக்கு வட இந்தியாவிலும் 230 கிளைகள் பரவியது.
"https://ta.wikipedia.org/wiki/கனரா_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது